“பான் இந்திய திரைப்படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி”: ‘அனிமல்’ செய்தியாளர் சந்திப்பில் ரன்பீர் கபூர்
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது..
இது சந்தீப் வங்காவின் படம், அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து வேலை பார்த்தோம். அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றி தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர்.
தயாரிப்பாளர் பிரனய் ரெட்டி வங்கா கூறியதாவது..
சந்தீப் மிக இண்டென்ஸான பெர்ஸன் என்பதால் அவருக்கு இண்டென்ஸான படம் செய்யவே பிடிக்கும். அர்ஜூன் ரெட்டி படம் போலவே இப்படத்திலும் கடுமையாக வேலை பார்த்திருக்கிறார். ரன்பீரை இப்படத்தில் புதுமையாகப் பார்ப்பீர்கள். இப்படத்தில் இண்டர்வெல் சீன் 18 நிமிட சண்டைக்காட்சி உள்ளது. தமிழ் டெக்னீசியன்சன் தான் இதில் வேலைப்பார்த்துள்ளார்கள். கண்டிப்பாக ரசிகர்கள் அந்தக்காட்சியைக் கொண்டாடுவார்கள். இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்
சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் கூறியதாவது..
இது என்னோட முதல் இந்திப்படம் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. பூஷன் சார் அவருக்கு நன்றி. ரன்பீர் சார், பாபி சார் உடன் வேலைப்பார்த்தது சவாலாக இருந்தது. அர்ஜுன் ரெட்டி பார்த்த போதே இயக்குநருடன் வேலைப் பார்க்கும் ஆசை வந்தது. தள்ளுமாலா மலையாளப் படம் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள். கதையைக் கேட்ட பிறகு ரன்பீர் சார் வைத்து டிரெயினிங் எடுக்க வேண்டும் என்றேன். ஒத்துக்கொண்டு வந்தார்கள் ரன்பீர் அவர்களுக்கு நன்றி. முதல் ஃபைட் 18 நிமிடம் வரும். மிக வித்தியாசமானதாக இருக்கும். இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள். புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் மிகவும் உதவியாக இருந்தார் அவரின் பணி பெரிதாகப் பேசப்படும். சந்தீப் இந்தப்படத்தை மிக வித்தியாசமானதாக எடுத்துள்ளார் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் கூறியதாவது..
முதன் முதலில் கதை கேட்கும்போது எனக்கு நிறையச் சவால்கள் இருந்தது. கதையோடு சேர்ந்து மிகவும் உணர்வுப்பூர்வமான ஆக்சன் இருந்தது. படத்தில் வரும் மிஷுன்கன் 4 மாதங்கள் உழைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கினோம். டிரெய்லர் பார்த்து சிஜியா என நண்பர்களே கேட்டார்கள், முடியாததைத் தான் சிஜி செய்வார்கள், அதனால் அந்த கேள்வி சந்தோஷமாக இருந்தது. இப்படத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் வித்தியாசமான ரன்பீர் இருப்பார். படம் தீ மாதிரி பறக்கும். கண்டிப்பாக ரசிப்பீர்கள் நன்றி.
திரைப்பட விநியோகஸ்தர் திரு முகேஷ் மேத்தா கூறியதாவது..
அர்ஜூன் ரெட்டி படம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தீப் ரெட்டி நல்ல கதையுடன் படம் எடுப்பவர், இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த போதே, இந்தப்படத்தை நான் தான் தமிழில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன். புஷ்பா படத்தை முன்பு இது போல் மலையாளத்தில் ரிலீஸ் செய்தோம். அர்ஜூன் ரெட்டி இங்கு தமிழில் நாங்கள் தான் தயாரித்தோம். இந்தப்படத்தின் தமிழ் டப்பிங் சூப்பராக இருக்கிறது. இந்தப்படத்தைக் கண்டிப்பாக இங்குள்ள ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது..
இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவம். நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக் கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான், இந்தப்படம் மிகவும் இண்டென்ஸான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இண்டஸ்ட்ரிக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இந்தப்படம் பொறுத்தவரை நான் செய்ததில் மிகவும் அழுத்தமான கேரக்டர் இந்தப்படம் தான். எந்த சுகர்கோட்டும் இல்லாத மிக ஒரிஜினலான கேரக்டர் இது. நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரன்பீருடன் வேலை பார்த்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருக்கு நன்றி.
நடிகர் பாபி தியோல் பேசியதாவது..,
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரன்பீர்கபூர்.அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எப்போதாவது தான் வாழ்க்கை முழுதும் மனதில் நிற்கும் படம் கிடைக்கும். அந்த வகையான படம் இது. இந்தப்படத்தில் சந்தீப் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இப்படத்தில் கதை தான் மிக முக்கியமான ஹீரோ. நல்லவன் கெட்டவன் எல்லாம் இல்லை கதை மிக உணர்வுப்பூர்வமாக இருக்கும், திரையில் நீங்கள் பார்க்கும் போது அதை உணர்வீர்கள். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்கும். சிஜி இல்லை எல்லாமே ஒரிஜினல் ஃபைட். மிக கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம். இரண்டு அனிமல்கள் சண்டைபோட்டுக்கொள்வது போல் இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது..
மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் இங்கு ஷீட் செய்திருக்கிறேன். எனக்குச் சென்னை ரொம்பப் பிடிக்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும்போதே சந்தீப் இது ரீமேக் இல்லை, இது ஒரிஜினல். ஆனால் மிக இண்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன். இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான டைரக்டர்களில் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது, ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை. எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும் இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும்போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர், விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்யத் தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 தியேட்டரில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி.
# # # # #
பூஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பங்காற்றும் இத்திரைப்படம் டிசம்பர் 1 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர்கள்: ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல்.
தொழில்நுட்பக் குழு:
இயக்குநர்: சந்தீப் ரெட்டி வங்கா
தயாரிப்பாளர்கள்: பூஷன் குமார் கிரிஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா
தயாரிப்பு நிறுவனம் : டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ், பத்ரகாளி பிக்சர்ஸ்,
மக்கள் தொடர்பு : யுவராஜ்