நீங்கள் எதை பேச மறுக்கிறீர்கள் என்பது தான் உங்கள் அரசியல்!
மலாலா சுடப்பட்டபோது ரியாக்ட் பண்ணிட்டு, நிர்பயாவுக்காக போராடிட்டு இசைப்பிரியா யாருன்னே தெரியாதவங்க தான் இங்கே உள்ள பெமினிஸ்ட்கள், மாதர் சங்கங்கள்.
பாலஸ்தீன விடுதலையை ஆதரிச்சிட்டு, காஸ்மீர் விடுதலையை பேசிட்டு, ஈழ விடுதலையை தப்பித்தவறியும் பேசாதவர்கள்தான் இங்கே விடுதலைகளை பற்றி பேசும் இடதுசாரி அறிவு சீவிகள்.
மத்திய கிழக்கு நாடுகளின் மீதான அமெரிக்க ஏகாதிபத்யத்தையும் பேசிட்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு கூறுகளையும் பேசிட்டு, இது ரெண்டும் நிகழ்ந்த ஈழத்தையும், புலிகளையும் பற்றி பேச மறுப்பவர்கள்தான் இங்கே ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்.
இந்திய – இந்துத்துவ அரசில் தலித்துகளின் மீது நிகழும் ஒடுக்குமுறைகளை பற்றி பேசுபவர்கள் யாரும் விடுதலைப் புலிகளின் அரசில் தலித்துகளின் எழுச்சியை பற்றி பேசுவதில்லை.
ஆகவே, என் அன்பான உலக மகா நடிகர்களே… நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பது அல்ல உங்கள் அரசியல். நீங்கள் எதை பேச மறுக்கிறீர்கள் என்பது தான் உங்கள் அரசியல்.
ANBE SELVA