இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 3 லட்சம் கோடி மெகாஊழல் செய்த அமித் ஷா!

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதளவுக்கு 3லட்சம் கோடி மெகா ஊழல் செய்திருக்கிற பிஜேபியின் அமித் ஷா..
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 08,2016இல் மோடி அரசு அறிவிப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வைத்து புதிய 2000ரூபாய் நோட்டுகளை அமித் ஷா தலைமையில் இந்திய ஒன்றியத்தில் இருக்கிற பல்வேறு துறைகளை சார்ந்த 26பேர் சேர்ந்து அச்சடித்திருக்கிறார்கள். பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபின் பெரிய பெரிய முதலாளிகளிடமிருந்த கருப்பு பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் அச்சடித்த புதிய 2000ரூபாய் நோட்டுகளை வழங்கியிருக்கிறார்கள். இப்படியாக குறைந்தபட்சம் 3லட்சம் கோடி பணத்தை கைமாற்றினோமென்று இந்த சதிகளில் முக்கிய பங்காளியாக இருந்த இந்திய உளவுதுறையான ’ரா’(RAW) அமைப்பை சேர்ந்த ராகுல் ராத்னேக்கர் என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். https://www.nationalheraldindia.com/…/randaw-field-assistan…
மேலும் இந்த மெகா ஊழலில் இந்திய ஒன்றியத்திலிருக்கிற பல்வேறு துறைகளையும் சட்டத்தை மீறி பயன்படுத்தியிருக்கின்றனர். அதாவது வெளிநாடுகளில் அச்சடித்த பணத்தை இந்திய இராணுவ விமானம் மூலம் டெல்லி எல்லையிலுள்ள ஹிண்டன் என்ற இராணுவ விமான படைதளத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து முதலாளிகளுக்கு சப்ளை செய்திருக்கிறார்கள்.
இதில் உச்சபட்ச மோசடி என்னவென்றால் வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்ட புதிய 2000ரூபாய் நோட்டுகளில் கவர்னர் கையொப்பம் இருக்குமிடத்தில் உர்ஜித் பட்டேல் கையெழுத்து இருக்கிறது. ஆனால் அப்போது கவர்னராக இருந்தவர் இராகுராம் ராஜன் ஆவார். உர்ஜித் பட்டேல் பதவியேற்றதே செப்டம்பர் 04,2016அன்றுதான் ஆனால் புதிய நோட்டு அச்சடித்ததாக சொல்லப்படுவது ஏப்ரல் 2016 ஆக ஆறுமாதத்திற்கு முன்பே இராகுராம் ராஜனை தூக்கிவிட்டு அந்த இடத்தில் உர்ஜித் பட்டேலை கொண்டுவரவேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்த மெக ஊழலை செய்திருக்கிறார்கள். அதற்கேற்றார் போல நவம்பர் 08,2016 அன்று புதிய கவர்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அதரவு தெரிவித்தார்.
இப்படி இவ்வளவு பெரிய ஒரு ஊழலை அரசின் அத்துணை துறைகளையும் கையில் போட்டுக்கொண்டு செய்திருக்கிற பிஜேபியின் மோடி அரசு எவ்வளவு கொடூரமான ஒரு அரசாக இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இதே கும்பல் தான் இன்று மீண்டும் நம்மை ஆளுவதற்கு ஆரவாரம் போட்டுக்கொண்டு வருகிறது. முடிவு மக்கள் கையில்.
மே 17 இயக்கம்
9884072010