‘பிக்பாஸ்’ பாவ்னி – அமீர் – திருமணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பாவ்னி மற்றும் நடன இயக்குநர் அமீர் திருமணம் நடந்தது.
தமிழில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘ஜூலை காற்றில்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பாவ்னி. தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சின்ன தம்பி’ தொடரின் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.
2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் 3 மாதங்களிலேயே பிரதீப் குமார் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூங்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார்.
இதன்பிறகு 2022ஆம் ஆண்டு பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவ்னி போட்டியாளராக கலந்துகொண்டார். இதே நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளராக பங்கேற்ற நடன இயக்குநர் அமீர் உடன் பாவ்னிக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.
இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.
விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.