பா.ஜ.க.வுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது அ.தி.மு.க: ஒப்பந்த விவரம்!

லேட் ஸ்ரீமான் எம்.ஜி.ஆரால் ஸ்தாபிக்கப்பட்டு, லேட் செல்வி ஜெயலலிதாவால் பாழாக்கப்பட்டு, மன்னார்குடி கொள்ளை கும்பலால் அபகரிக்கப்பட்ட அதிமுக எனும் கட்சி, நாளது தேதி முதல், எண் 13, கலவர காலனி, மதவெறி சாலை, புதுடெல்லி என்ற முகவரியில் வசிக்கும் ஸ்ரீமான் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.கவிற்கு 99 வருட கால குத்தகைக்கு விடப்படுகிறது.

இதன்படி, எம்.ஜிஆர் உருவாக்கிய  இந்த கட்சியின் சொத்துக்கள் மற்றும் வஸ்துக்களில் (தொண்டர்கள் உட்பட) அதிமுகவிற்கு இனி எந்த உரிமையும் கிடையாது. அதுபோலவே அதிமுகவைச் சேர்ந்த யாரும் எந்த சந்தர்ப்பத்திலும் சொந்த புத்தியை பயன்படுத்தும் தவறைச் செய்யப் போவதில்லை என்றும், டெல்லியிலிருந்து வரும் தாக்கீதுகளை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குத்தகை பணத்தை மொத்தமாக அல்லாமல் அவ்வப்போது சில்லறையாக வழங்க டெல்லி பார்ட்டி ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

எழுதி கொடுப்பவர்கள்:

  1. ஓ.பன்னீர்செல்வம்
  2. எடப்பாடி பழனிச்சாமி
  3. தம்பிதுரை

எழுதி வாங்குபவர்கள்:

1.நரேந்திர மோடி
2.அமித்ஷா

சாட்சி மற்றும் தரகு:

1.வித்யாசாகர் ராவ்
2.குருமூர்த்தி

குத்தகை ஒப்பந்த தயாரிப்பில் உதவி:

1.வருமான வரித்துறை
2.அமலாக்கத் துறை
3.டெல்லி காவல்துறை
4.தேர்தல் கமிஷன்

(வாட்ஸ்-ஆப்பில் வந்த பதிவு)

0a