இரண்டே நாளில் 13 அடிமைகளை மாற்றிய ஜெயலலிதா!

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும், புதுவையின் 30 தொகுதிகளுக்கும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.

இதில் அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளராக அறிவித்த எம்.ஜி. முத்துராஜாவை மாற்றிவிட்டு, புதிய வேட்பாளராக வைகைச் செல்வன் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று முதலில் 10 அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர்.

மேட்டூர் – செ. செம்மலை

வேதாரண்யம் – ஓ.எஸ். மணியன்

காட்டுமன்னார்கோவில் – முருகுமாறன்,

பூம்புகார் – எஸ் பவுன்ராஜ்

மன்னார்குடி – எஸ் காமராஜ்

தியாகராயநகர்- பி,சத்தியநாராணயன்

நாகர்கோவில் –  ஏ. நாஞ்சில் முருகேசன்

திருபுவனை  – சங்கர்

திருநள்ளார் – முருகையன்

காரைக்கால் தெற்கு தொகுதி  – அசனா

என 10 தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சி.வி.இளங்கோவன் நீக்கப்பட்டு, சி.ஆர்.சரஸ்வதி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தற்போது மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ். பாண்டியன் நீக்கப்பட்டு, மதுரை மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இரண்டே நாட்களில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, 4-வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, மொத்தம் 13 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

தனது அமைச்சு அடிமைகளை மாற்றிக்கொண்டே இருப்பதை வாடிக்கையாகக்கொண்ட ஜெயலலிதா, வேட்புமனு தாக்கலாகும் நாள் வரை இன்னும் எத்தனை வேட்பாள அடிமைகளை மாற்றுவாரோ!

0a1m