“வெள்ளித்திரை நாயகர்கள் குறும்படத்திலும் நடிக்கலாம்”: யஷ்மித்
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/07/0a2d-4.jpg)
‘யூகன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் யஷ்மித். தொடர்ந்து ‘எந்த நேரத்திலும்’ போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அவர் தற்போது புகைப்பட கேமராவை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ மாஸ்டர் பீஸ்’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வெற்றி பெற்ற பின்னர் வெள்ளித் திரைக்கு வருவார்கள். ஆனால் இவர் வெள்ளித்திரையில் நாயகனாக சில படங்களில் நடித்துவிட்டு இப்போது குறும்படத்தில் நடிக்கிறாரே…?
இக்கேள்விக்கு பதிலளித்த யஷ்மித் “இன்றைய காலகட்டத்தில் குறும்படம் மூலம் சினிமாவிற்கு வந்த இயக்குனர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். குறும்படமோ, இல்லை, நீளப்படமோ, நல்ல கதை இருந்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரம் இருந்தால் கண்டிப்பாக நடிக்கலாம். அப்படி இந்த ‘மாஸ்டர் பீஸ்’ குறும்படத்தின் கதையும் மிகச் சிறப்பாக இருந்தது நடித்தேன். விரைவில் இந்த படத்தை வெள்ளித்திரையில் பார்ப்பீர்கள்” என்றார்.