“தமிழ் படத்துக்கு ஏன் ‘ஆங்கில படம்’ என்ற தலைப்பு?”: இயக்குனர் விளக்கம்!

ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படத்துக்கு முதலில் ‘இங்கிலீஷ் படம்’ என பெயர் வைத்திருந்தார்கள். இப்போது அதை ‘ஆங்கில படம்’ என மாற்றியிருக்கிறார்கள்.
ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி, சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ஸ்ரீஜா அறிமுகமாகிறார். புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.
தமிழ் படத்துக்கு ஏன் ‘ஆங்கில படம்’ என்ற தலைப்பு?
இயக்குனர் குமரேஷ் குமார் கூறுகையில், “ஆங்கில படம்’ என்று பெயர் வைத்ததற்கு காரணம், இப்படத்தில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் ஆங்கில படம் போல் யாரும் யூகிக்க முடியாத வகையில் கதை நகரும். அதனால் தான் அந்த பெயர் வைத்தோம்.
“இந்த கதையை நான் பல நாயக நடிகர்களிடம் சொன்னபோது, ‘கதை நல்லா இருக்கு. ஆனா நீ புது இயக்குனர். சொன்ன மாதிரி எடுப்பாயா?’ என கேட்டனர். ஆனால் இப்போது ராம்கி, சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது.
“படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி. உண்மையிலே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. மேலும் சந்தோஷபடுத்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும். நிச்சயம் நீங்கள் எல்லோரும் திருப்தியான படம் என்று சொல்வீர்கள்” என்றார் இயக்குனர் குமரேஷ் குமார்.
இப்படத்தில் நடித்துள்ள ராம்கி, சஞ்சீவ் ஆகிய இருவரும், “இப்படம் எங்களை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும். உண்மையில் நீங்கள் இதுவரை பார்க்காத ராம்கி, சஞ்சீவ்-வை இப்படத்தில் பார்ப்பீர்கள்” என்றனர்.
இசை – எம்.சி.ரிக்கோ
ஒளிப்பதிவு – சாய் சதீஷ்
கலை – பழனிவேல்
படத்தொகுப்பு – மகேந்திரன்