தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை போல் தான் மே 23-ம் தேதியின் முடிவுகளும் இருக்குமா?
அவ்வாறு இருந்தாலும் அதில் அதிர்ச்சி இல்லை.
தேர்தல் கமிஷன் உட்பட இந்திய ஆட்சி அதிகாரங்களை தன் கைப்பாவையாக மாற்றிவிட்டது ஆர்.எஸ்.எஸ் பிஜேபி.
எனவே இவர்கள் செய்யும் முறைகேடுகளையும் மீறி வெற்றி பெறுவது கடினமான ஒன்று தான்.
முடிவுகளை குறித்து மக்கள் மனதில் சந்தேகம் வராதபடி செய்யப்படும் மூளைச்சலவையாக இந்த கருத்துக்கணிப்பை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பயன்படுத்தியிருக்க கூடும்.
மேலும், ஆர்.எஸ்.எஸ் பிஜேபி தூண்டிவிட்ட மதவெறி என்னும் போதையும் பிஜேபிக்கு கணிசமாக உதவும்.
பிஜேபிக்கு எதிரான வாக்குகளை மக்கள் ஒருங்கிணைத்திருந்தால் மட்டுமே முறைகேடுகளையும், மதவெறியையும் மீறி பிஜேபியை வெற்றி பெற இயலும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளை போல் தான் மே 23-ம் தேதி முடிவுகள் அமையும் என்றால், கீழ்கண்டவைகள் நடக்கும்:
வரும் சட்டசபை பொதுதேர்தலில் ரஜினி வெற்றி பெற்று முதல்வராவார்.
தமிழ்நாடு வட இந்தியர்களின் பிடியில் சிக்கும்.
இந்தியாவை பிஜேபி நிரந்தரமாக ஆட்சி செய்யும் நிலைமை உருவாக்கப்படும்.
தமிழகத்தை பிஜேபியின் பினாமி கட்சி நிரந்தரமாக ஆட்சி செய்யும் நிலைமை உருவாக்கப்படும்.
மக்கள் தங்களின் சுயமரியாதையை இழந்து அடிமைகளாக வாழும் நிலை உருவாகும்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்பவர்கள் கொடூரமாக தண்டிக்கப்படுவார்கள்.
பாசிசத்தை எதிர்த்து குரல் கூட கொடுக்க இயலாத கொடுமையான நிலை வரும்.
தமிழகம் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவும் தொழில் வளர்ச்சியிலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும் கடுமையாக வீழ்ச்சியடையும்.
இந்திய ஆட்சி அதிகார மையங்கள் முற்றிலும் பாசிசமயமாக மாறும்.
இருண்ட காலத்தை நோக்கி இந்தியா செல்லும்.
Terance JP