“அதிசயம்… ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பிவிட்டது”: இனப்பகைவன் சுனா சுவாமி தகவல்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஓர் இந்துத்துவ கொலை வெறியாட்டம் ஆட திட்டம் போட்டார், பாஜக மாநிலங்களவை எம்.பி.யும் தமிழினப் பகைவனுமான சுப்பிரமணியன் சுவாமி.
‘ஜெயலலிதாவுக்கு சுவாசக் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று அப்போலோ நிர்வாகம் முதன்முதலாக அறிவித்தபோது, இதுதான் சாக்கென்று சுனா சுவாமி, “தமிழக சட்டப்பேரவையை சஸ்பெண்ட் செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை (அதாவது, மோடி அரசின் நேரடி ஆட்சியை) ஏற்படுத்த வேண்டும். கடுமையான ஆயுதச் சட்டத்தை பிறப்பித்து விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், மார்க்சியர்கள், பெரியாரியர்கள், இஸ்லாமியர்கள் போன்ற இந்துத்துவ எதிர்ப்பாளர்களை ஒடுக்க வேண்டும்” என்கிற ரீதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு குதூகலமாய் கடிதம் எழுதினார்.
இதற்கு தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் வெடித்துக் கிளம்பியதால், அவர் சத்தமில்லாமல் பூணூலைச் சுருட்டிக்கொண்டார்.
இதற்கிடையில், அப்போலோ மருத்துவர்களோடு சேர்ந்து லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்ததன் பலனாக ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. “ஜெயலலிதா பேசுகிறார்” என்று அப்போலோ நிர்வாகமே அறிக்கை வெளியிட்டுவிட்டது.
இத்தனைக்குப் பிறகு, தான் ஏதோ தனது எஜமானர்களான சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் உதவியோடு அப்போலோவில் உளவு பார்த்து தகவல் சேகரித்தது போல் சுனா சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அது:-
“ஜெயலலிதாவின் பக்தர்கள் மகிழ்ச்சி அடையலாம். ஏனென்றால், ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பி விட்டதாகவும், அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படியிருந்தால் அது ஒரு அதிசயம் தான்” என்று இந்த ட்வீட்டில் தமிழினப் பகைவன் சுனா சுவாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பியது அதிசயம் இல்லை. இந்த சுனா சுவாமி தமிழகத்தில் நடமாட தமிழர்கள் இன்னும் அனுமதிக்கிறார்களே… அதுதான் அதிசயம்…!