“ராம்குமாரின் ஊரிலிருந்து விடை பெறுகிறேன்!” – திலீபன் மகேந்திரன்

ராம்குமாருக்கு இன்றுடன் காரியம் முடிந்தது…

தன் மகன் உட்பட அனைத்தையும் இழந்த ராம்குமார் குடும்பத்துக்கு உதவி கேட்டிருந்தேன். நேற்று வரை 46 ஆயிரம் ரூபாய் தோழர்கள் இணைந்து நிதி உதவி செய்திருந்தனர் ராம்குமார் தாயார் புஷ்பம் வங்கி கணக்கில்.

இது ராம்குமார் இறந்த பின்பு.

ராம்குமார் இறக்கும் முன்பு, ராம்குமார் வாட்ஸப் குரூப் மற்றும் நண்பர்கள் மூலம் ரூ.25 ஆயிரம் வழக்குக்காக உதவினோம்.

இதில் குறிப்பிடத்தக்கவர் அண்ணன் புகழேந்தி. வழக்கு தொடங்கியிலிருந்து இன்றுவரை 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல ராம்குமார் குடும்பத்துக்கு உதவியுள்ளார். ராம்குமாரின் தந்தை BSNL கடைநிலை ஊழியர். அவருக்கு இந்த மாத சம்பளம் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே. அண்ணன் புகழேந்தியும் BSNL முதல்நிலை அதிகாரி என்பதால், அந்த குடும்பத்துக்கு பிஸ்ன்ல் மூலம் லோனும் வாங்கி தர ஏற்பாடு செய்திருக்கிறார். இவ்வளவு செய்த தோழர், போஸ்மார்டம் முடிந்து ராயப்பேட்டையில் உடல் வெளியே வரும்போது உடலை கூட பார்க்க முடியவில்லை.. ஓரத்தில் ஒதுங்கியே இருந்தார்.

ராம்குமாரின் தந்தையும், அண்ணன் புகழேந்தியும் நேரில் உரையாடும்போது அதை பார்ப்பதற்கே நெகழ்ச்சியாக இருக்கும்.

என் மீது நம்பிக்கை வைத்து ராம்குமார் குடும்பத்துக்கு உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி..

இன்னும் சிலர் கொஞ்ச நாளில் உதவுவதாக கூறியுள்ளனர் அவர்களுக்கும் நன்றி.

பார்ப்பனிய அரச பயங்கரவாதத்தால் தன் ஈன்ற மகனை இழந்த அக்குடும்பத்தின் வலியையும், வேதனையும் ஈடுசெய்ய முடியாது..
.
ஆனால் இப்போதையே நிதிஉதவி அவர்களுடைய மனவேதனையை கொஞ்சம் குறைக்கும் என்பதில் சிறு மகிழ்ச்சி..

மீனாட்சிபுரம் கிராமத்திலிருந்து விடை பெறுகிறேன்.

இப்படிக்கு,

நம்பிக்கையானவன் மகி.

0a1a