“முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரவத்தான் செய்யும்! ஏனென்றால்…”

முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது, பரபரப்பு ஏற்படுத்துவது போன்றவையெல்லாம் தவறுதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் மருத்துவ அறிக்கைகள், அவர் உடல்நலம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூறிவந்திருந்தால் வதந்திகளுக்கு இந்த அளவு இடம் இருந்திருக்காது.

துவக்கம் முதலே “அவருக்கு காய்ச்சல்தான். அவர் நன்றாகத்தான் இருக்கிறார், சும்மா ஓய்வெடுக்கிறார்” என்பது போல அறிக்கைகள் வெளியிட்டதுதான் வதந்திகளை தவிர்க்க முடியாதவையாக மாற்றுகின்றன.

காய்ச்சலுக்காகவும், ஓய்வெடுக்கவும் இவ்வளவு முக்கிய பதவியில் உள்ள ஒருவர், மிக முக்கியமான பிரச்சினைகள் நாட்டில் நிலவும்போது மருத்துவமனை சென்று தங்குவாரா என்ற கேள்வியை எப்படி பொதுமக்கள் தவிர்க்க முடியும்?

பொத்தாம்பொதுவான மருத்துவ அறிக்கைகள் ஐயத்தைதான் தோற்றுவிக்கும் என்பது கூட புரியாமலா மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் இருப்பார்கள்?

 நாட்டு மக்கள் அனைவரும் அ.தி.மு.க கட்சியினர் கிடையாது அல்லவா… சொன்னதைக் கேட்டுக்கொண்டு பூசணிக்காய் உடைத்துக்கொண்டிருக்க?

வெளிப்படையான தகவல் பகிர்வின்மை தவிர்க்கப்பட வேண்டும். மாநில மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கிறது. அதை மதிக்காவிட்டால் வதந்திகள் பரவத்தான் செய்யும்.

 RAJAN KURAI KRISHNAN