பெங்களூர் அமைதியாக இருக்கிறதா?: மறுக்கிறார் பெங்களூர் வாழ் தமிழர்!

“பெங்களூர் அமைதியாய் இருக்கிறது. ஒரு பாதிப்பும் இல்லை” என்கிற ரீதியில் சிலர் நிலைத்தகவல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மைசூர் ரோடில் TN registration வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன.

பன்னார்கட்டா அடையார் ஆனந்த பவன் உணவகம் தாக்கப்பட்டுள்ளது.

கமர்சியல் ஸ்ட்ரீட்டில் பிரச்சனை இருக்கிறது. நண்பர் ஒருவர் அங்கே மாட்டிக்கொண்டிருக்கிறார்.

என் மகனின் கல்லூரி அருகில் –  பனசங்கரி – பஸ் எரிப்பு என்று தேர்வுகளை ஒரு வாரம் தள்ளிப் போட்டுவிட்டார்கள்.

கனகபுரா சாலையில் இருக்கும் நண்பரின் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கொடிபிடித்து ரகளை செய்ததில் அலுவலகம் 4 மணிக்கே மூடிவிட்டார்கள்.

பன்னார்கட்டா சாலையில் கொஞ்சம் ரகளை என்று கேள்விப்பட்டு 4 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் எங்கள் Akshay Nagar லேஅவுட்டில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.

வெளியே போனல் அடி வாங்காவிட்டாலும், அசௌகர்யம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றறிக.

– ஆனந்த் ராகவ்

எழுத்தாளர்

(முகநூல் பதிவு: 12-09-2016, 6.00 PM)