சல்மான் கான் விடுதலை: “மான்களை கொன்றவன் எவன்டா?”
மான் வேட்டை வழக்கிலிருந்து நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனில், மான்களை கொன்றவன் எவன்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி இரண்டு மான்களை வேட்டையாடியதாக ஹிந்தி நடிகர் சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கீழ்நீதிமன்றம், கடந்த 2006ஆம் ஆண்டு சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில், 2007ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், சாட்சியங்கள் சரியாக நிரூபிக்கப்படாததால் சந்தேகத்தின் பலனை அளித்து சல்மான் கானை வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்துள்ளது.
சல்மான் கான் குற்றவாளி இல்லை எனில்,
மான்களை கொன்றவன் எவன்டா?