“லீக்காவது, லாக்காவது! ‘தலைவர்’ படத்துக்கு போடுடா அதிர்வெடியை!!”
“மச்சி… டேய்… கபாலி இன்ட்ரோ வீடியோ லீக் ஆயிடுச்சுடா. பார்த்தியா? என்னடா நடக்குது? அநியாயம்டா இதெல்லாம்…”
இந்த மாதிரி பல பேர் மெஸ்ஸேஜ் அனுப்பிட்டாங்க. எதுக்கு இவ்வளவு ஃப்பீலிங்குன்னு தெரியல.
ஒரு சில விஷயத்தையெல்லாம் தெளிவா சொல்லிடறேன்.
‘தளபதி’ ரிலீஸ் ஆகி 25 வருஷம் ஆகுது. அப்பாவோட ஸ்கூட்டர்ல ஒய்யாரமா நின்னுட்டே போய் ஆல்பர்ட் தியேட்டர்ல பார்த்தேன்.
‘அண்ணாமலை’ படம் ரிலீஸ் ஆகி 24 வருஷம் ஆகுது. அப்பாவே முதல் நாள் ஈவினிங் ஷோ, பாடி சிவசக்தி தியேட்டர்ல பார்க்க குடும்பத்துல எல்லாரையும் கூட்டிட்டு போனாரு.
‘பாட்ஷா’ ரிலீஸ் ஆகி 21 வருஷம் ஆகுது. என் சித்தப்பாவோட மொத்த கேங்கோட போய் முதல் நாளே அரக்கோணத்துல செம்ம அரட்டையா பார்த்தேன்.
எனக்கோ சீட்டி-விசில் அடிக்கவே தெரியாது. இன்னிக்கும் ‘தளபதி’ படத்துல மழை சீன் ஆரம்பிச்சாலும் சரி, ‘அண்ணாமலை’ படம் ஆரம்பிச்சு தாரை-தப்பு பறந்தாலும் சரி, ‘பாட்ஷா’ படம் ஆரம்பிச்சு பூசணிக்காய் காத்துல பறந்தாலும் சரி, பக்கத்துல யார் இருந்தாலும் விசில் அடிக்கச் சொல்லி உசுர வாங்குவேன். அப்பா இருந்த வரையிலும் வீட்ல டிவில எந்த ரஜினி பஞ்ச் சீன் வந்தாலும், “அப்பா, விசில் அடிப்பா”ன்னுவேன். புள்ள கேட்டேங்கறதுக்காக அவரும் மறுபேச்சு பேசாம காது கிழிய விசில் அடிச்சு அமர்க்களப்படுத்துவாரு.
‘பாபா’ படத்தை வேலூர்ல காலேஜ் ஃப்ரண்ட்ஸோட காலையில முதல் ஷோ பார்க்கும்போது, ஆட்டோலயிருந்து இறங்கற சீன் வந்ததும், பக்கத்துல சும்மா இருந்த என் தோஸ்த்து ஒருத்தன ஓயாம விசில் அடிக்க வெச்சு, அது கவுண்டமணின்னு தெரிஞ்சதும் எல்லாரும் மொக்கை வாங்கினோம். அவன் என் மேல செம்ம்ம்ம்ம காண்டாயிட்டான்.
ரஜினி படத்தை பொறுத்த வரைக்கும் இந்த இன்ட்ரோ சீன் இல்ல, படமே லீக் ஆனாலும் சரி, இன்ட்ரோ சீனுக்கு தியேட்டர்ல விசில் சத்தத்துல கூரை கிழியும். 30-40 வருஷ படத்தை இப்போ பார்த்தாலும் அந்த படத்துல இன்ட்ரோ சீனுக்கு ஆரவாரம் பண்ணாமலா இருக்கோம்? 🙂
‘சதுரங்க வேட்டை’யில சொன்னது தான். “உன்னை ஏமாத்துனவன எதிரியா நினைக்காத. ஒரு வகையில அவன் உனக்கு குரு”. இந்த லீக் விஷயத்துலயும் இது உண்மை. இப்போ எவனோ ஒருத்தன் தனக்கே தெரியாம நல்லது பண்ணியிருக்கான். எந்த சீக்வன்ஸ்ல கரெக்ட்டா விசில் அடிக்கனும்னு தெளிவா சொல்லிக் கொடுத்திருக்கான். அவன திட்டக் கூடாது. நன்றி சொல்லனும். ‘பாபா’ படம் மாதிரி இல்லாம நாளைக்கு அடிக்கற விசில் எதுவும் வேஸ்ட் ஆவாதுல்ல!
ரஜினி படத்தை தியேட்டர்ல பார்க்கறதுங்கறது ஒரு வகையான திருவிழா மாதிரியான அனுபவம். அதுல இன்ட்ரோ சீனுக்கு விசில்-கத்தல்-கூச்சல் எல்லாம் நேர்த்திக்கடன் மாதிரி.
ஒரு சீன் இல்ல, மொத்த படத்தையே லீக் பண்ணி காத்துல பறக்கவிட்டலும், இந்த வழக்கம் எல்லாம் என்னவோ மாறப் போறதில்ல. நாளைக்கு சரியான டைமிங்க்ல, நான் இல்ல, என் மகனே சவுண்டு விட்டு விசில் அடிச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல. அந்த சூழல் அப்படி இருக்கும். அமெரிக்காவாவது, வெண்ணையாவது. 🙂
இது என்னைக்கோ ஒரு நாள் நடக்கற ஆனந்தக் கூத்து. இது இப்படித்தான் இருக்கும். ஏன்னெல்லாம் ஆராயக் கூடாது.
தலைவர் படத்துக்கு போடுடா அதிர்வெடிய!
லீக்காவது லாக்காவது!
– கார்த்திக் ரங்கராஜன்