“பெருமாள் முருகன் எழுத்துலகுக்கு திரும்ப வேண்டும்!”
பெருமாள் முருகனின் நூல் மீதான நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகாவது அவர் எழுத்துலகத்திற்கு கட்டாயம் திரும்ப வேண்டும்.
கவனமான உழைப்பையும் தேடலையும் கொண்டிருக்கும் அவருடைய ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ உள்ளிட்ட அபுனைவு நூல்கள், ‘பீக்கதைகள்’ உள்ளிட்ட புனைவு நூல்கள் ஆகியவற்றை வாசித்த அனுபவத்தில் சொல்கிறேன், அவர் எழுத்துலகிலிருந்து விலகியிருப்பது தமிழிற்கு பெரிய இழப்பே.
இலக்கியப் போலிகளும் பாசாங்கு எழுத்துகளும் பெருகிக் கொண்டிருக்கும் சூழலில் குறைந்த அளவிலுள்ள அசலான படைப்பாளிகளும் இங்கிருந்து விலகுவது தமிழ் இலக்கியச் சூழலுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
சக படைப்பாளிகள், ஆய்வாளர்கள், மாணவர்கள், வாசகர்கள் கருத்தொருமித்து அவர் எழுத்துலகிற்கு திரும்பும் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.
கலைஞர்களின் பயணத்தில் கலாசாரக் காவலர்கள் இடையூறு ஏற்படுத்தும் இந்த இழிவான போக்கு வருங்காலத்திலாவது சாத்தியமாகவே கூடாது.
சுரேஷ் கண்ணன்