விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மோனிகா சிவா!
இன்றைய குழந்தை நட்சத்திரங்கள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது உண்மை!
கமல், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு, ஷாலினி, ஷாம்லி – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் மோனிகா சிவாவும் வருங்கால நட்சத்திரப் பட்டியலில் இடம் பிடிப்பார்.
சென்னையில் படிக்கும் அந்த ஆறு வயசு குழந்தையின் கைகளில், தற்போது பத்து விரல்களை மிஞ்சிய அளவுக்கு படங்கள்.
விஜய்யின் 60, சங்கு சக்கரம், கட்டப்பாவை காணோம், ஜெய்யுடன் ஒரு படம், சித்தார்த் நடிக்கும் படம் என இன்னும் பெயரிடப்படாத சில படங்கள்.
துருதுருவென ஓடிக் கொண்டிருக்கும் இந்த பாப்பாவின் சேட்டைகளை இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் ரசித்து வரவேற்பது மோனிகா சிவாவுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கிறது.
“விஜய் 60 படத்தில் யாருக்கு மகளாக நடிக்கிறே?” என்று கேட்டோம். உதட்டின் மீது கை வைத்து “உஷ்… சொல்லக் கூடாது” என்று பெரிய மனுஷி போல பேச, வாயடைத்து போனோம்