இந்த மீட்பு ஒரு சரித்திர சம்பவம்!

கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் பிரசவத்திற்கான ஒன்பது மாதங்கள் விண்வெளியில் தாங்கள் பத்திரமாக மீட்கப்படுவோம் என்கிற நம்பிக்கையுடன் வாழ்ந்து மீண்டிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவருக்கும் வாழ்த்துகள்.
காலம் கடந்தும் அவர்களை பத்திரமாக மீட்ட சாதனைக்குப் பின்னால் இயங்கிய நூற்றுக்கணக்கான அறிவுக் களஞ்சியங்களுக்கு பாராட்டுக்கள்.
ஒருவேளை காலதாமதமானால் என்று யோசித்து இத்தனை மாதங்களுக்கும் உணவு வைத்திருந்த நாசாவின் முன்ஜாக்கிரதை விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுக்கள்.
நிச்சயமாக இந்த மீட்பு ஒரு சரித்திரச் சம்பவம்.
நாம் கற்க வேண்டியவை:
எதிர்மறையாகவும் யோசி!
முன்கூட்டி திட்டமிடு!
தன்னம்பிக்கையைத் தளரவிடாதே!
நம்பியவர்களைக் கை விடாதே!
விஞ்ஞான ஆற்றலை உணர்!
மதிப்புமிக்க உயிராய் வாழ்!
சின்ன பிரச்சினைக்கு மலைக்காதே!
-பட்டுக்கோட்டை பிரபாகர்,
எழுத்தாளர்.