”நாம் மறந்துபோன ஒரு தலைவர் ‘விடுதலை 2’ மூலம் நம் எல்லோருடனும் உரையாட வருகிறார்!” – ராஜீவ் மேனன்
எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மேனன் பேசுகையில், “’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர் விஜய்சேதுபதி இரண்டாம் பாகத்தில் வெளியே வந்து நிறைய பேசுகிறார், காதல் செய்கிறார், ஆக்ஷனும் உண்டு. ராஜா சாரின் இசைக்கு நான் இயக்கம் செய்ய ஆசைப்படுகிறேன். அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். நாம் அனைவரும் மறந்து போன ஒரு தலைவர் வெற்றிமாறன் மனதில் திரையிட்டு இப்போது நம் எல்லோருடனும் உரையாட வருகிறார். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார். வாழ்த்துகள்.”
நடிகர் சேத்தன், “இந்தப் படத்தின் பார்ட்1 பார்த்துவிட்டு என்னைத் திட்டாதவர்களே கிடையாது. அந்தப் பாராட்டு எல்லாம் வெற்றிக்குதான் சேரும். படம் பார்த்துவிட்டு என்னைக் கூப்பிட்டு ராஜா சார் பாராட்டியதை மறக்க மாட்டேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.”
நடிகை பவானி ஸ்ரீ, “’விடுதலை2’ படம் மூலம் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. புதுமுகமான என்னை நம்பி தமிழரசி கதாபாத்திரம் கொடுத்த வெற்றி சாருக்கு நன்றி. விஜய்சேதுபதி சார், சூரி சார் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கும் நடிகர்களுக்கும் நன்றி. ராஜா சாரின் இசையில் வரும் பாடலில் நானும் ஒரு பகுதி என்பதில் மகிழ்ச்சி.”
நடிகர் கென் கருணாஸ், “இயக்குநர் வெற்றிமாறன் சாருக்கு என் முதல் நன்றி. எனக்கு இந்தப் படம் பெரிய வாய்ப்பு. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் என்னை எப்போது பார்த்தாலும் பாசிட்டிவாக பேசுவார். இளையராஜா சார் இருக்கும் மேடையில் இருப்பதே எனக்கு பெருமை. என் வாழ்க்கையில் சில பேரை சந்தித்த்தற்காக கடவுளிடம் நன்றி சொல்வேன். அப்படியானவர்களில் விஜய்சேதுபதி சாரும் ஒருவர். படப்பிடிப்பில் நாங்கள் ஐந்தரை மணிநேரம் எல்லாம் பேசியிருக்கிறோம். அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி. சூரி அண்ணன் என் வாழ்வில் மிக நெருக்கமான ஒருவர். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.”
நடிகர் சூரி, “கடந்த 49 வருடங்களாக நம் எல்லோர் வீட்டு விசேஷத்திலும் ராஜா அய்யாதான் விழா நாயகன். இசை கடவுள், இசை மருத்துவர் என எல்லா வார்த்தைகளுக்கும் அவர் தகுதியானவர். அவர் இசையமைக்கும் படத்தில் நடித்திருப்பது என் பாக்கியம். விஜய்சேதுபதி சார், ராஜீவ் மேனன் சார், சேத்தன் சார், பவானி ஸ்ரீ, கென் கருணாஸ் என அனைவருடனும் நடித்திருப்பது மகிழ்ச்சி. கென் கருணாஸ் சூப்பராக ஆக்ஷன் செய்திருக்கிறார். தயாரிப்பாளர் எல்ரெட் சாருக்கு நன்றி. ’விடுதலை1’ படம் உங்களுக்குப் பிடித்தது போலவே, ’விடுதலை2’ படமும் உங்களுக்குப் பிடிக்கும். சேது மாமாவும் மஞ்சு மேமும் சேர்ந்து வசனமே பேசாமல் ஒரு காட்சியில் காதலை வெளிப்படுத்தியிருப்பார்கள். சிறப்பான காட்சி அது! இந்தப் படம் சிறந்த நடிகராக இன்னும் உங்களை உயர்த்தும் என நம்புகிறேன். ‘விடுதலை’க்கு முன் ’விடுதலை’க்கு பின் சூரி என என் வாழ்க்கையை பிரிக்கலாம். வெற்றிமாறன் என்ற யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி வாங்கியிருக்கிறேன். இதுநாள் வரை நான் சினிமாவை பார்த்ததும், சினிமா என்னைப் பார்த்ததும் மாறியிருக்கிறது. என் காமெடியைப் பார்த்து வாழ்த்தியவர்கள் இப்போது நல்ல நடிகனாக என்னைப் பாராட்டுகிறார்கள். ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ படங்களையும் வாழ்த்தினார்கள். இதற்கெல்லாம் காரணம் வெற்றிமாறன் சார்தான். நல்ல நினைவுகளை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. நன்றி.”