ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் (வயது 74) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் வயிற்றுவலி காரணமாக, சிகிச்சைக்கு அனுமதி என கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்துக்கு இன்று (அக்டோபர் 1) முக்கிய பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்.

ஆனால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதயம் தொடர்பான பிரச்சனை காரணமாக, இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்கப்பட்டு, இன்று காலை அவருக்கு முக்கிய மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரம், ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைகள் முடிந்த பின்னர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை, ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் இருந்தும், அவரது குடும்பத்தினரிடம் இருந்தும் எந்தவொரு விளக்கமும் வரவில்லை.

இன்று காலை ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து, மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.