திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்: புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு:-

  • தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
  • மத்திய சென்னை – தயாநிதி மாறன்
  • வட சென்னை – கலாநிதி
  • ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
  • காஞ்சிபுரம் – செல்வம்
  • வேலூர் – கதிர் ஆனந்த்
  • அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
  • திருவண்ணாமலை – அண்ணாதுரை
  • ஆரணி – தரணிவேந்தன்
  • கள்ளக்குறிச்சி – மலையரசன்
  • தருமபுரி – மணி
  • கோவை – கணபதி ராஜ்குமார்
  • பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி
  • சேலம் – டி.எம்.செல்வகணபதி
  • ஈரோடு – பிரகாஷ்
  • நீலகிரி (தனி) – ஆ.ராசா
  • தஞ்சாவூர் – முரசொலி
  • பெரம்பலூர் – அருண் நேரு
  • தேனி – தங்க தமிழ்செவன்
  • தென்காசி (தனி) – ராணி
  • தூத்துக்குடி – கனிமொழி

இவர்களில், புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

0a1e