இந்தியாவிலும் ஹிட்லரின் நாஜிக்கட்சி ஆதரவு திரைக் கலைஞர்கள் இயங்குகிறார்கள்!

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய அனிமல் (Animal) படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்டர்வெல் வரை வந்திருக்கிறது.

இதுவரை Alpha Male, Patriarchy, Violence, Male Chauvinism, Female Subjugation, Man-Child Syndrome என்று நிறைய வந்திருக்கிறது. இது பலரும் பல முறை விமர்சித்து முடித்து விட்ட விஷயங்கள்தான்.

ஆனால் படத்தில் நான் கவனித்த ஒன்று யாராவது இதுவரை சுட்டிக் காட்டி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. காலையில் கூகுள் செய்ததிலும் ஒரு சில ஊடகங்கள் மட்டுமே இதைக் குறிப்பிட்டு இருக்கின்றன. மைய நீரோட்ட ஊடகங்கள் எதுவும் பேசவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தில் ரன்பீர் கபூர் – அனில் கபூர் குடும்பத்தின் நிறுவனத்துக்கு ‘ஸ்வஸ்திக்’ என்று பெயர். ஸ்வஸ்திகாதான் இந்த நிறுவனத்தின் லோகோ.

பெரும்பாலான இந்தியர்களுக்கு மேலோட்டமாக பார்ப்பதற்கு இது இந்திய பாரம்பரிய ஸ்வஸ்திகா சின்னம் போலத் தோன்றலாம். ஆனால் 20-ம் நூற்றாண்டு ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிக்கட்சியின் சின்னமும் இதுதான். இரண்டுக்கும் இடையில் வித்தியாசங்கள்: இந்திய ஸ்வஸ்திக் சின்னத்தில் முனைகள் மழுங்கி இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பொட்டு என்று நான்கு பொட்டுகள் வைக்கப்பட்டிருக்கும். நாஜி சின்னத்தில் முனை நேராக இருக்கும். பொட்டுகள் இருக்காது. இந்த இரண்டு சின்னங்களையும் பதிவில் இணைத்திருக்கிறேன்.

0a1b

படத்தில் அந்த நிறுவனத்தின் சின்னம் ஏறக்குறைய நா**ஜிகளின் சின்னம் போலத்தான் தோற்றமளிக்கிறது. முனை மழுங்கியது போல இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம்தான் அப்படி இருக்கிறது. நடுவில் பொட்டுகள் இல்லை.

சரி, இது ஏதோ தற்செயல்தான். சந்தீப் ரெட்டி இந்திய சின்னத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்று நினைத்தால் படத்தில் ஒரு காட்சியில் ரன்பீர் கபூர் சபதம் போல கையை தூக்கிப் பிடித்து நிற்கிறார். இது ஏறக்குறைய நாஜி சல்யூட்டை ஒத்திருக்கிறது. அதையும் அந்த லோகோ முன்பாகவே செய்கிறார். அந்தக் காட்சியையும் இணைத்திருக்கிறேன்.

0a1c

சந்தீப் ரெட்டி நிஜமாகவே நாஜி ஆதரவாளரா என்பது தெரியாது. ஆனால் எனக்கு இந்த கனெக்சன் தெரியாது என்று அவர் சொன்னால் கண்டிப்பாக பொய் பேசுகிறார் என்றே அர்த்தமாகும்.

அது ஒரு புறம் இருக்க, இந்தியாவிலாவது இந்தத் தொடர்பை நிறைய பேர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நம்மைத் தாண்டி உலகெங்கிலும் இந்த சின்னம் நாஜி சித்தாந்தத்துடன் மட்டுமே தொடர்பு படுத்தப்படுகிறது. முன்னர் ஒரு முறை கனடாவில் கோயில்களில் இந்த சின்னம் பொறிப்பதை அரசு தடை செய்ய முயன்றது. பின்னர் இந்திய வம்சாவளி எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி அந்த முயற்சியை நிறுத்தினார்.

எது எப்படியோ, உலகெங்கிலும் இந்தியரல்லாதோர் இந்தப் படத்தைப் பார்க்கும்போது அந்தக் காட்சிகளில் அதிர்ச்சி அடைவதை தவிர்க்கவே முடியாது.

இந்தியாவிலும் நாஜி ஆதரவு கொண்ட திரைக்கலைஞர்கள் இயங்குகிறார்கள் என்று உலகுக்கு சேதி சொல்ல முயன்றிருக்கும் சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு வாழ்த்துகள்.

ஸ்ரீதர் சுப்ரமணியம்