பிறந்தது 2024: உலகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!
உலகம் முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். சென்னையில் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டு நிறைவடைந்து 2024ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு கரோனா பரவல் மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாடுகள் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது.
‘ஹீரோநியூஸ் ஆன்லைன் டாட்காம்’ சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!