விஜய்யின் ‘லியோ’ படக்கதையை இப்படித்தான் கட்டமைச்சிருப்பாங்க!

லியோ!

A History of Violence ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, யதேச்சயா பாத்து பயங்கரமா புடிச்சுப் போன படம். அதோட உரிமைய அதிகாரப்பூர்வமா வாங்கி லியோ பண்றதா ஆரம்பத்துலயே ஒரு பேச்சு இருந்தது. ட்ரெய்லர் பாக்கும்போது அது இன்னும் நம்பகமாகுது.

தன்னோட காஃபி ஷாப்ப கொள்ளையடிக்க வந்தவங்கள ஹீரோ கொன்னு மத்தவங்கள காப்பாத்த, அந்த சுற்று வட்டாரத்தில ஒரு திடீர் செலிபரட்டி ஆயிடறாப்ல. லோக்கல் நியூஸ் பேப்பர், டிவி செய்திகள்ல அவர் போட்டோலாம் வருது. அதைத் தொடர்ந்து கடந்த கால பிரச்சனைகளும்! அவர் யாரு, என்னவா இருந்தாரு, இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிச்சாருன்ற ‘பாட்ஷா’ டைப் படமே தான். (கடந்த 27 வருஷமா வர்ற மத்த படங்கள்ல ‘பாட்ஷா’ தாக்கம் இருக்குன்னா அது எப்பேற்பட்ட படமா இருக்கனும்? தனியா எழுதனும்)

இப்ப ‘லியோ’ ட்ரைலர் ஆரம்பத்துல, விஜய் வாய்ஸ்ல வர அந்த ’சைக்கோ கில்லர் – துப்பாக்கி’ கதை கிட்டத்தட்ட A History of Violence செட்டப் மாதிரியே இருக்கு. ஆனா அது இப்படி தோண வைக்க / ட்ரெய்லருக்காக யோசிச்ச ஒரு சுவாரசியமான திசைதிருப்பல்னு நினைக்கிறேன்.

என்னோட அனுமானம், ஆரம்பத்துலருந்து அப்பப்ப செய்திகள்ல வந்த Hyena சண்டை தான் படத்துடைய முதல் Plot Pointஆ இருக்கும். A History of Violence ல வர்ற காஃபி ஷாப் சம்பவம் மாதிரி, காஷ்மீர்ல பேக்கரி வச்சிட்டு அமைதியா வாழ்ந்துட்டு இருக்கிற விஜய், ஊருக்குள்ள புகுந்து எல்லாரையும் கடிச்சு கொன்னுட்டு இருக்குற அந்த Hyena-வ கொன்னு, மக்கள/ ஒரு குழந்தையை காப்பாத்திடறாரு. அதன் மூலமா கிடைக்கிற மீடியா வெளிச்சம் கடந்த கால பிரச்சனைகளை கொண்டு வருது.

இப்படித்தான் கட்டமைச்சு இருப்பாங்கன்னு தோணுது. அப்படி இருந்தா நிச்சயமா சுவாரஸ்யமான விஷயம் தான். பார்ப்போம்!

JEYACHNDRA HASHMI