பாஜகவின் – சங்கிகளின் சதிகளை அம்பலப்படுத்துவோம்; முறியடிப்போம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கொண்டுள்ள அரசியல் உறவாடல் மீதுள்ள வெறுப்பால், JDU – RJD கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தவே, பீகாரில் உள்ள பாஜக “தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக” திட்டமிட்டு பொய்களை பரப்பியது.

பீகார் மாநில பாஜக சஹர்சா எம்எல்ஏ அலோக் ரஞ்சன், பிஹ்பூர் எம்எல்ஏ குமார் சைலேந்திரா, எம்எல்சி மற்றும் பீகார் பாஜக பொதுச்செயலாளர் தேவேஷ் குமார், ஹர்சித்தி எம்எல்ஏ கிருஷ்ணந்தன் பாஸ்வான், மற்றும் உபி பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் போன்ற பாஜகவுடன் தொடர்புடைய பலர் பீகார் மாநில பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளங்களில், “தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக” சமூக வலைதளங்களில் சதித்தனமாக செய்திகளைப் பகிர்ந்தனர்.

உ.பி. மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது, தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐ.பி.சி.,யின் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

(உம்ராவ் ஒரு ட்வீட்டில், 12 ஹிந்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக பொய் செய்தியை பரப்பி அது வைரலானது.)

தமிழ்நாடு பாஜக IT WINGகும் ஒரு போலி செய்தியை உருவாக்கியது. தமிழகத்தில் நாம் வட இந்தியர்களை தாக்குகிறோம் என ஒரு செய்தியை சென்னை ஓட்டல் சங்கம் என்ற பெயரில் வெளியிட்டது. இந்த தேதியைப் பாருங்கள். இது மார்ச் 1,2023. அறிக்கை. ஈரோடு இடைதேர்தலில் அனைவரும் மும்முரமாக இருக்கும்போது பாஜக வினர் அனைவரும் கலந்து பேசி சதித் திட்டமிட்டனர். மத்திய பாஜகவின் ஆதரவுடன் பீகார், உபி, தமிழ்நாடு பாஜக வால் இந்த சதி, வதந்தி திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது.

ஆனால், ‘ வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக, தமிழ்நாடு பாஜக அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக’ பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை நாடகம் ஆடுகிறார்.

எச்சரிக்கை!

பாஜகவின்- சங்கிகளின் சதிகளை அம்பலப்படுத்துவோம்; முறியடிப்போம் !

-Chandra Mohan

 

 

 

 

எல்லா உணர்ச்சிகளும்:

39பா. ஜீவ சுந்தரி மற்றும் 38 பேர்