“தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதையாவது மதவாத அமைப்புகள் தீர்க்குமா?” – சுபாஷ் சந்திர போஸ் கேள்வி
“ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் அறியாதவர்கள் கூட சுதந்திரத்திற்காக ஏங்குகிறபோது… மதவாதம் அனைத்திலும் அதன் அசிங்கமான தலையை உயர்த்தியுள்ளது, அம்மணப்பட்டும் நிற்கிறது. இந்து மக்கள்தொகை பெரும்பான்மையாக இருப்பதால் இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தின் குரல்களைக் கேட்கிறோம். இவை அனைத்தும் பயனற்ற சிந்தனைகள் ஆகும். தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதையாவது மதவாத அமைப்புகள் தீர்க்குமா? வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஏழ்மைக்கு இதுபோன்ற அமைப்புகளிடம் ஏதேனும் பதில் இருக்கிறதா?… நடைமுறையில் முஸ்லீம்-விரோத பிரச்சார சாவர்க்கர் மற்றும் இந்து மகாசபையின் கருத்துக்களின் அர்த்தம் ஆங்கிலேயருடன் முழுமையான கூடிக்குலாவல் என்பதேயாகும்.
(கூமில்லாவில் பேச்சு, 14 ஜூன் 1938, சுபாஸ் சந்திரபோஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுதி III)
Chandra Mohan