“நான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதிரி”: விஜயகாந்த் பேச்சு – வீடியோ

சென்னையை அடுத்த மாமண்டூரில் தேமுதிக –  மக்கள் நலக் கூட்டணி – தமாகா தேர்தல் சிறப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “ஜெயலலிதாவிற்கு எதிரி கருணாநிதி. கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதா. இவர்கள் இரண்டு பேருக்கும் எதிரி இந்த விஜயகாந்த்” என்றார். மேலும், கூட்டணி விவகாரத்தில் தாம் 1,500 கோடி ரூபாய் வாங்கியதாகக் தெரிவிக்கப்படும்  குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

விஜயகாந்த்தின் முழுபேச்சு வீடியோ:

https://youtu.be/xSMn_8WBteg

மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தேமுதிகவிலிருந்து விலக்கப்பட்ட சந்திரகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை, இம்மாநாட்டில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா கடுமையாக சாடினார். “தேமுதிகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யூதாஸ் போன்றவர்கள். சிலர் அண்ணி எனக் கூறி வஞ்சகம் செய்துவிட்டனர். விஜயகாந்த் கட்டுப்பாட்டில் தான் தேமுதிக இருக்கிறது. நான் விஜயகாந்த் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறேன். நாங்கள் பணத்துக்கு என்றும் அடி பணிய மாட்டோம். எங்கள் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் கறை படியாதவர்கள். திமுக, அதிமுக தலைவர்களை கறை படியாதவர்கள் என்று கூறமுடியுமா?” என அவர் கேள்வி எழுப்பினார். “இம்மாநாடு ஆட்சி மாற்றத்திற்கான வெற்றி மாநாடாக அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சிக்கான அச்சாரமாக மாமண்டூர் மாநாடு மாறியுள்ளது” என்றார் அவர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க்ட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோரும் இம்மாநாட்டில் பேசினார்கள்.