மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா!
பிரபல இயக்குனர் பாலாவுக்கும், முத்துமலர் என்பவருக்கும் 2004ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மதுரையில் பாரம்பரிய முறைப்படி, பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பிரார்த்தனா என்ற பெண்குழந்தை உள்ளது.
பாலாவுக்கும், முத்துமலருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 4 ஆண்டுகளாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்துவந்த நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற முடிவு செய்து அவர்கள் குடும்ப நீதிமன்றத்தை அணுகினார்கள்.
மார்ச் 5ஆம் தேதி அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது குடும்ப நீதிமன்றம். இதனால் 55 வயது இயக்குனர் பாலாவின் 17 வருட மணவாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.