‘பாகுபலி’, ‘விசாரணை’, இளையராஜா, சமுத்திரக்கனிக்கு தேசிய விருது!
63-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது.
அகில இந்திய அளவில் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற ‘பாகுபலி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘பிக்கு’ இந்திப் படத்தில் நடித்த அமிதாப்பச்சன் சிறந்த நடிகராகவும், ‘தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்’ படத்தில் நடித்த கங்கனா ரணவத் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தை இயக்கிய சஞ்ச்ய் லீலா பன்சாலி சிறந்த இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெற்றி மாறனின் ‘விசாரணை’ படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும், இதில் நடித்த சமுத்திரக்கனிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருதும், இதில் பணியாற்றிய மறைந்த கிஷோருக்கு சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.
சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ‘தாரை தப்பட்டை’ படத்துக்காக இளையராஜாவுக்கு வழங்கப்படுகிறது.
‘இறுதிச்சுற்று’ படத்தில் நாயகியாக நடித்த ரித்திகா சிங்குக்கு சிறப்பு பரிந்துரை விருது அளிக்கப்படுகிறது.
தேசிய விருதுகள் முழுப் பட்டியல்
சிறந்த படம்: பாகுபலி
சிறந்த இயக்குநர்: சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த நடிகை: கங்கனா ராவத் (தானு வெட்ஸ் மானு, இந்தி)
சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன் (பிக்கு, இந்தி)
சிறந்த உறுதுணை நடிகர்: சமுத்திரக்கனி (விசாரணை)
சிறந்த உறுதுணை நடிகை: தான்வி ஆஷ்மி (பாஜிராவ் மஸ்தானி, இந்தி)
சிறந்த பாப்புலர் திரைப்படம் – பஜ்ரங்கி பாஜ்யான்
சிறந்த நடன வடிவமைப்பு: ரெமோ டிசோஸா – தீவானி மஸ்தானி என்ற பாடலுக்காக படம் பாஜிரோ மஸ்தானி
சிறந்த இசையமைப்பு: என்னு நிண்டே மொய்தீன் படத்தில் இடம்பெற்ற காத்திருன்னு காத்திருன்னு பாடலுக்காக எம்.ஜெயச்சந்திரன்
சிறந்த ஆடை வடிவமைப்பு: நானக் ஷா ஃபகிர் திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒப்பனை: நானக் ஷா ஃபகிர் திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த எடிட்டிங்: விசாரணை படத்துக்காக கிஷோர் (மறைவுக்குப் பின்)
சிறந்த திரைக்கதை: பிக்கூ படத்துக்காக ஜூஹி சதுர்வேதி மற்றும் ஹிமான்சு சர்மா
சிறந்த ஒளிப்பதிவு: சுதீப் சாட்டர்ஜி – படம்: பாஜிரா மஸ்தானி
சிறந்த பின்னணி இசை: இளையராஜா (தாரை தப்பட்டை)
சிறந்த பின்னணி பாடகி: மொனாலி தாகூர் – பாடல்: மோ மோ கே தாகே
சிறந்த துணை நடிகை – தன்வி ஆஸ்மி – படம்: பாஜிரா மஸ்தானி
சிறந்த குழந்தைகள் திரைப்படம் – துரந்தோ
சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் – வல்லிய சிறகுள்ள பக்ஷிகள்
சமூக பிரச்சினைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் – நிர்ணயகம் NIRNAYAKAM
தேசிய ஒறுமைப்பாட்டை பறைச்சாறியதற்காக நர்கீஸ் தட் விருது பெறும் திரைப்படம்: நாநக் ஷா ஃபகிர்
அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: நீரஜ் கியாவன் – படம்: மஸான்
சிறப்பு பரிந்துரை:
ரிங்கு ராஜகுரு – படம்: சாய்ராட்
ஜெயசூர்யா – SU SU SUDHI VATHMEEKAM & LUKKA CHUPPI
ரித்திகா சிங் – படம்: இறுதிச் சுற்று
சிறந்த திரைப்படம், சிறப்பு தேர்வு – மொழி வாரியாக:
சிறந்த தமிழ் மொழிப்படம்: விசாரணை
சிறந்த போடோ மொழிப்படம்: தவ் ஹூதுனி மெத்தாய்
சிறந்த காஷி மொழிப்படம்: ஒனாத்தா
சிறந்த ஹர்யான்வி மொழிப்படம்: சத்ராங்கி
சிறந்த வாஞ்சோ மொழிப்படம்: தி ஹெட் ஹன்டர்
சிறந்த மிசோ மொழிப்படம்: கிமாஸ் லோட் பியாண்ட் தி கிளாஸ்
சிறந்த மணிப்புரி மொழிப்படம்: எய்புசு யோஹன்பியு
சிறந்த மாய்திலி மொழிப்படம்: மிதிலா மக்கான்
சிறந்த சம்ஸ்கிருத மொழிப்படம்: பிரியமானஸம்
சிறந்த தெலுங்கு மொழிப்படம்: காஞ்சி
சிறந்த பஞ்சாபி மொழிப்படம்: சவுதிகூட்
சிறந்த ஒடியா மொழிப்படம்: பஹதா ரா லூஹா
சிறந்த மராட்டிய மொழிப்படம்: ரிங்கன்
சிறந்த மலையாள மொழிப்படம்: பதேமரி
சிறந்த கொங்கனி மொழிப்படம்: எனிமி
சிறந்த கன்னட மொழிப்படம்: தித்தி
சிறந்த இந்தி மொழிப்படம்: தம் லகா கே ஹைசா
சிறந்த வங்காள மொழிப்படம்: சங்காசில்
சிறந்த அசாமி மொழிப்படம்: கோத்தனோடி