வாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்?

என்ன செய்யப் போறீங்க?

“அவனை கைது பண்ணி நீதிமன்றத்துல நிறுத்த போறோம்!”

யார வச்சி கைது பண்ணுவீங்க?

“போலீஸ வச்சுதான்.”

யாரு… இந்த பொள்ளாச்சி சம்பவத்துல குண்டாஸ் வழக்கு பதிய தாமதிச்சதா நீதிமன்றம் காறி துப்புச்சே அந்த போலீஸ்கிட்டயா?

“போலீஸ்கிட்ட நீதி கிடைக்கலன்னாலும் பரவாயில்ல.. உச்ச நீதிமன்றம் வரைக்கும் போவோம்.”

எந்த நீதிமன்றம்? இடிச்சவனுக்கே இடத்தையும் கொடுத்தானுங்களே அந்த நீதிமன்றமா?

“ம்.. சரிதான். அங்க போனாலும் அவிங்க தப்பிச்சுப்பாங்க..”.

இப்போல்லாம் ஜெயிலும் விசாரணையும் மக்கள்கிட்ட இருந்து கிரிமினல காப்பாத்ததான் பயன்படுது தெரியுமா?

“ஆமாமா..”

வேற என்ன செய்வீங்க?

“ஹ்ம்ம்.. காமெடியாத்தான் இருக்கு. ஆனா வேற வழியில்ல… அரசாங்கத்துக்கிட்ட முறையிடுவோம்…!”

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

“பின்ன என்ன பண்றது?”

இங்க இருக்கற அமைப்பு மொத்தமும் சாயம் போய் வெளுத்துடுச்சு தெரியுதா?

“தெரியுது… ஆனாலும்…..?”

ஆட்சி, அதிகாரம், போலீஸ், நீதின்னு எல்லாம் பணத்துக்கும் சாதிக்கும் மட்டுமே மண்டியிடறது, புரியுதா?

“கரெக்டுதான்.”

பணத்துலயும் சாதியிலயும் தாழ்ந்தவன மட்டும்தான் இந்த அமைப்பு காலங்காலமா கிரிமினலாக்கிக்கிட்டு இருக்குங்கற உண்மை உரைக்குதா?

“எல்லாம் சரிதான்.. “

அப்போ நீதி கிடைக்க என்ன பண்ணலாம்?

“எது… என்கிட்ட ஏன் கேள்வி கேட்கறீங்க?”

எவன்கிட்ட பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறம் அவனல்லாம் என்ன செய்யலாம்?

“தெரியலையே..”

இந்த அமைப்போட ஆதரவ வச்சிக்கிட்டு எல்லாரு வாழ்க்கையையும் நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்?

“அதான் தெரியலையே!”

மேலும் மேலும் மக்களை முட்டாளாக்கி கழுத்தறுத்துக்கிட்டு இருக்கறவனுகள என்ன பண்ணா தகும்?

“எனக்கு தெரியாமதான உங்ககிட்ட கேட்குறேன்.. நீங்க சொல்லுங்க என்ன செய்யலாம்?”

என்ன செய்யலாம்?

RAJASANGEETHAN