சப்பைக்கட்டு கட்டும் விஜய் டிவிக்கு தொடரும் சவுக்கடி!
சூப்பர் சிங்கர்-5 தேர்வில் நடந்த மோசடி அம்பலமாகி, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பதால், இனியும் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்ற நிலையில், சப்பைக்கட்டு கட்டும் வகையில் விஜய் டிவி ஒரு வழழா கொழகொழா விளக்கம் அளித்திருக்கிறது. விஜய் டிவியின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, இதையும் நார் நாராய் கிழித்து, தோரணமாய் தொங்கவிட்டு வருகிறார்கள், சமூகவலைத்தள பதிவர்கள். அவர்கள் சிலரது பதிவுகள் உங்கள் பார்வைக்கு….
# # #
பிஎஸ்கே எஸ்சி மணி மேகலை: விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்-5 வெற்றியாளராளர் ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஏற்கனவே பல படங்களில் பாடிய பின்னணிப் பாடகர் என்பதை ஒப்புக்கொண்ட விஜய் டிவி, பின்னணிப் பாடகர்கள் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று பதிலளித்துள்ளது.
இது குறித்து த நியூஸ் மினிட் (The News Minute) என்ற இணையதளத்திற்கு விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தலைவர் பிரதீப் மில்ரோய் பீட்டர் அளித்துள்ள தகவலில், “எங்களுடைய போட்டி விதிமுறைகளில், எங்குமே திரைப்படங்களில் இடம்பெற்றவர்களோ அல்லது பின்னணிப் பாடகர்களோ போட்டியில் பங்குபெற முடியாது என்று குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆனந்த் ஒரு பின்னணிப் பாடகர் என்பதில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லை என்று கூறியிருக்கும் விஜய் தொலைக்காட்சி, முதல் நேர்காணலின்போது ஆனந்த் இதைத் தங்களிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளது.
“தான் பின்னணி பாடியிருப்பதை அவர் எங்களிடம் தெரிவித்தார். ஆனால், தான் அவ்வளவு பிரபலம் இல்லை என்பதால், தான் போட்டியில் கலந்து கொள்ள வந்ததாகவும், இந்தப் போட்டியில் பங்கேற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் அறிமுகமாகலாம் என்றும் அவர் கூறினார்” என்று பிரதீப் கூறியுள்ளார்.
“இந்தச் செய்தியைப் பரப்பியவர்கள் நிச்சயமாக முழு நிகழ்ச்சியையும் பார்த்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்து வந்தவர்களுக்குத் தெரியும் அவர் இதற்கு முன்பு பின்னணி பாடியிருக்கிறார் என்று. நாங்கள் எதையும் மறைக்கவில்லை” என்றும் பிரதீப் கூறியுள்ளார்.
மேலும், நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு பின்னணிப் பாடகர்கள் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்ற விதிமுறை இருந்ததாகவும், ஆனால் சூப்பர் சிங்கர் 3-லேயே அந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டதாகவும் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு பின்னணிப் பாடகரே எங்களது போட்டியில் வந்து கலந்து கொள்கிறார் என்றால், அதை நாங்கள் பெருமையாக நினைக்கமாட்டோமா?” என்றும் பிரதீப் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவித்த அந்த நேரத்தில், மேடைக்கு வந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், என்னுடைய அடுத்த படத்தில் ஆனந்த் பாடுகிறார் என்றவுடன், ஆனந்த் தனது முகத்தில் காட்டினாரே ஒரு சந்தோஷம்! அடடா!
“சொல்லுங்க ஆனந்த்.. சந்தோஷ் நாராயண் சார் இசையிலேயே பாடப் போறீங்க. எப்படி ஃபீல் பண்றீங்க?” என்று என்னமோ எங்கோ ஒரு கிராமத்தில் ஆர்கெஸ்ட்ராவில் பாடிக்கொண்டிருந்தவருக்கு சந்தோஷ் நாராயணன் இசையில் பாட வாய்ப்பு வாங்கித் தந்தது போல் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மாறி மாறி ஆனந்திடம் கேள்வி கேட்டு அந்தச் சூழலை மேலும் பரவசப்படுத்தியது இன்னும் கண்முன்னேயே இருக்கிறது.
டி.இமான் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்களைப் பாடி விட்டவருக்கு சந்தோஷ் நாராயணை அணுகுவது என்ன எட்டாக் கனியா?
# # #
சுமி.பி: “திரைத்துறையில் உள்ளவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்கிற விதிமுறை முதலில் இருந்தது உண்மைதான். ஆனால், அது சரியாக வராததால் அந்த விதிமுறையை நீக்கிவிட்டோம்” என்று சொல்கிறார் விஜய் டிவியின் தலைமை நிர்வாகி பிரதீப் மில்ராய் பீட்டர்…
அது தான் ஏற்கனவே தேடி புடிச்சு, சினிமாவுலயும் பாடியாச்சு. அப்புறம் என்ன வெண்ணைக்கு “தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல்” என்ற ஸ்லோகன், என்னவோ புது குரலை தேடற மாதிரி …!!!
“தமிழகத்தின் மலையாள பின்னணி பாடகர்களில் ஒரு பிரம்மாண்ட குரலுக்கான தேடல்”ன்னு மாத்தி தொலைக்க வேண்டியது தானே….
மக்களும் ‘ரியாலிட்டி ஷோ’ன்ற நெனப்புல பார்க்காம, ‘விஜய் டிவி’ அவார்ட் ஃபங்கஷன்னு நெனச்சு பார்ப்பாங்கலே……!!
ரூல்ஸ் வச்சு இருந்தாங்களாம்….!! இப்போ நீக்கிட்டாங்களாம்…..!! என்னா …கத….!!!
“முன்னாடி மக்கள் ஓட்டு போட்டு வின்னரை தேர்ந்தெடுக்கிற விதிமுறை இருந்துச்சு… ஆனால் அது சரியாக வராததால் அந்த விதிமுறையை நீக்கி விட்டோம்…. 5/10 ரூபா செலவழிச்சு மக்கள் ஓட்டு போடணும்…
ஆனால் வெற்றியாளரை நாங்கள் தான் தேர்ந்தெடுப்போம்…” என்ற அடுத்த உண்மையை விஜய் டிவி எப்போ சொல்ல போறாங்களோ…!!!
“விஜய் டிவி’ தமிழகத்தின் பிரம்மாண்ட பொய்க்கான தேடல்”.
# # #
தீப்தி ரகு: பின்னணி பாடகர்கள் பங்கேற்கக் கூடாது என்கிற விதி இல்லை.. – விஜய் டிவி சூப்பர் சிங்கர் பற்றி விளக்கமளித்துள்ளது!
சூப்பர் சிங்கர்-2016 goes to சின்னகுயில் சித்ரா and K.J. யேசுதாஸ்…
இரண்டு பேரும் மலையாளி தானே…? பார்த்து கொடுங்க…! தமிழனா இருந்துட கூடாது; அப்புறம் இது ‘தமிழகத்தின் செல்லக் குரல் தேடல்’ இல்லாமல் ஆகிவிடும்.
# # #
Rajasangeethan John: Then why the hell you give the show a tagline like “தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல்” Mr.Pradeep?
If you have changed the regulations after 4 years in a way to admit playback singers, has it ever been made public? With the public’s outcry happening now, isn’t it clear enough that whatever the change in regulation that you claim to have made has never reached them at all? Why that ‘so called’ change had to remain that confidential Mr.Pradeep? Or is it because that you wanted it in that way?
Moreover can you tell, how many playback singers have participated in the show after that “infamous change” had been made?
If nobody, then why suddenly a playback singer pops out now and wins the title, who incidentally belongs to the same state where you hail from?
As usual, you blame the show’s audience. Good.. They deserve this. Finally, to top it all, your explanation is nothing but just bullshit, as we already knew what you and your people did for Jessica in the last season, who supposed to be the winner according to audience’s votes.
Shame on you!
# # #
Yin Yang: தமிழ் சினிமா பின்னணி பாடகரைக் கூப்பிட்டு சூப்பர் சிங்கர் விருது கொடுத்த கேவலத்தைக்கூட மன்னிச்சுரலாம்.
ஆனால், இந்த ஆனந்த் பய ஜெயிச்சவுடனே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பின்னணி பாட சான்ஸ் தர்றேன்னு அறிவிச்சப்போ என்னமோ புதுசா சான்ஸ் கிடைச்சா மாதிரி நடிச்சான் பாருங்க ஒரு நடிப்பு. அதை மட்டும் மன்னிக்கவே முடியாது.
ரியாலிட்டி ஷோன்ற பேர்ல சீரியல் நடத்துறாங்க
# # #
சாய் புத்ரா: சந்தோஷ் நாராயணன் பாட சான்ஸ் தரேன்னதும் குதிச்ச குதி உலகு நடிப்பு!
# # #
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்: ஒருவர் ஒன்றிரண்டு பாடல்கள் திரையில் பாடினாலே பெரும் புகழ்பெறும் இந்தக் காலத்தில் இவர் இவ்வளவு பாடல்கள் பாடியும் வெளியில் தெரியாததும் இவ்வளவுநாள் இதை யாரும் வெளியில் சொல்லாததும் ஆச்சரியம்தான்.
மற்றபடி விஜய் டிவி செய்யும் தில்லுமுல்லுகள், அபத்தங்களுக்கெல்லாம் அதிசயப்பட எதுவும் இல்லை.
# # #
Spicyonion.com: A Facebook post went viral, when a user pointed out that Anand Aravindakshan, winner of Super Singer 2016, Season 5, was already a playback singer, who had sung songs in Aarohanam and plenty of other Tamil films since 2012. He has also sung a song in “Neerparavai”, which is a popular film as well.
What sparked the controversy was that many viewers of the show claimed that the Channel, being run by Mallus (Malayalis), was plotting to make a winner out of a Malayali, thereby making him popular as a singer! Critics of the show got a shot in the arm, when this revelation happened on the social media yesterday.
Anand Aravindakshan has been a playback singer for popular films as Ivan Vera Madhiri, 10 Enrathukulla, Pandiya Nadu and Madhayaanai Koottam. All of these films are mainstream feature films. They had also received good attention from the audiences!
To top it all, a post highlighted that on the stage, the host said that popular music director Santhosh Narayanan would offer him a song, as though he was a fresh candidate, while Anand so humbly accepted it. Since then, there has been many Facebook posts and Tweets making fun of the channel’s “ethics”, which actually claimed it to be a “reality show”. Everyone highlighted the unethical practice of the Television channel and the show producers.
However, Pradeep Milroy Peter, Programming Head at Star Vijay TV, has clarified that there were no rules that playback singers could not contest in Super Singer. They had also scrapped the rule after the first three seasons because most of the participants had sung tracks and religious numbers for popular musicians.
Since it gave rise to technical difficulties in qualifying participants, they had long removed the rules. He also clearly stated that those rules were not at all applicable for the current show and that the channel would be proud, if playback singers would want to participate in the show. So, the show was open for all. In the initial interview, he said, Anand Aravindakshan stated that he had sung songs as a playback singer but wanted the world to notice him and his talents enough and so wanted to contest in Super Singer.
Still, the audiences argue that it was “not fair competition”, if they would bring in a popular playback singer and put him in contest with other singers, who were fresh and raw. They also pointed at a huge gap between the claims of the show as a “reality show” and being unethical in allegedly scripting a winner. The audiences also suspect that they deliberately made him a “Wild Card Entry” and helped him regain the top spot. After these allegations, the TV Channel has now clarified that it has not flouted its own rules nor is it an unfair practice.
However, the audience claim it is “unethical” for they are not sure, if the winner is selected through SMS voting, which they suspect to be a ploy to generate revenue and as a sort of “make-believe”, to attract interests to the show. Though considered just as “unethical” by the viewers, the questions that linger are: “Was the show scripted to bring up a Malayali winner and to make him popular?” And “Are the winners really chosen by audience votes via SMS?”
Surely, Airtel Super Singer 5 and Star Vijay TV have raised more questions than answers.
# # #
அகிலன், உதவி இயக்குனர்: விஜய் டிவியின் ஏர்செல் சூப்பர் சிங்கர் மீண்டும் ஒரு கேவலமான வேலையை பார்த்துள்ளது.
இந்த தடவை முதல் பரிசு வென்ற ஆனந்த் அரவிந்தாக்ஷன்… இவர் இந்த போட்டியில் பங்கு பெறுவதற்கு முன்பே சில திரைப்படங்களில் பின்னணி பாடியிருக்கிறார்.. உதாரணம்.. நீர்ப்பறவை (2012) இயக்குனர் சீனு ராமசாமி
போட்டியை நடத்துவதற்கு முன்பே வெற்றியாளர் இவர்தான் என்பதை முடிவு செய்துவிட்டு நடத்தியது மிகவும் கேவலமான செயல்..
தலைசிறந்த நடுவர்கள்… சிறப்பு அழைப்பாளர்கள் என நாள்தோறும் ஆர்ப்பரித்த விஜய் டிவி, பின்னணி பாடகர்களை போட்டியாளர்களாக அறிவித்து இருக்கலாமே…
சக போட்டியாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய விஜய் டிவியின் இந்த செயல் கண்டனத்துக்குரியது..
எதுக்கு உனக்கு இந்த விளம்பரம்..?
# # #
கோடங்கி: என்னா ஒரு வில்லத்தனம்…
இதுபோல போட்டிகளை விழுந்து விழுந்து பாக்குறவன் எப்பவுமே கேனையந்தான்…
இதுலகூட கலந்துகிட்டவங்களையும் கேனயர்களாக்கி இருக்காங்க…
பாவம், நிஜமான போட்டின்னு உசிரகுடுத்து பாடியும் பைசா யூஸ் இல்லை…
லட்சங்கள் நடமாடுறதால லட்சியங்களை காத்துல விட்ட நடுவர்கள், வாங்கினதுக்கு வஞ்சம் வைக்காம கைய உசத்திட்டு போயிட்டாங்க…
இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. பண்ணது பிராடுத்தனம்… மொள்ளமாரித்தனம்னு தெரிஞ்சிட்டதால நடுவர்கள் உடனே இரண்டாவது ஜெயிச்ச பிள்ளைக்கு முதல்பரிச வாங்கிக் குடுக்கணும்…
இல்லனா, இது போல பிராடு நிகழ்ச்சிகளை ஜனங்க ஏத்துக்ககூடாது.