கீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…

இன்று காலை தான் ரஜினிகாந்த் காஷ்மீர் விஷயத்தில் ஒரு மட்டமான கருத்தை சொல்லியிருந்தார், இப்போது விஜய் சேதுபதி சொல்லியிருக்கும் கருத்தை கேளுங்கள்..

கேள்வி: காஷ்மீர் விவகாரம் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?.

விஜய் சேதுபதி: “நிச்சயமா அது ஜனநாயக விரோதமானது, பெரியார் அன்னைக்கே சொல்லிட்டாரு அவங்கவங்க பிரச்சினைகளுக்கு அவங்கவங்க தான் தீர்வு காண முடியும். உங்கள் வீட்டின் மீது நான் அக்கறை செலுத்தலாம் ஆனால் ஆளுமை செலுத்த முடியாது கூடாது”

கீதை படிப்பவருக்கும் பெரியாரை படிப்பவருக்குமான வித்தியாசம் இது.

கீதையை படிப்பவர் அதிகார வர்க்கத்தின் பக்கம் நின்று பேசுகிறார்; பெரியாரை படிப்பவர் ஒடுக்கப்படும் மக்களின் வலியில் நின்று பேசுகிறார்.

ANBE SELVA