இரண்டு வாழைப் பழங்களுக்கு ரூ.442.50 பில்: ’விஸ்வரூபம்’ நடிகர் அதிர்ச்சி!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2019/07/0a1a-13.jpg)
கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ். இவர் படப்பிடிப்புக்காக சண்டிகர் சென்றுள்ளார். அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார். அங்கு அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது இரண்டு வாழைப்பழங்கள் கேட்டிருக்கிறார்.
இரண்டு வாழைப்பழங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவற்றோடு சேர்த்து கொடுக்கப்பட்ட பில்லைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார் ராகுல் போஸ். காரணம், இரண்டு வாழைப்பழங்களின் விலை ரூ.375 என்றும், இதற்கு ஜி.எஸ்.டி வரி ரூ.67.50 என்றும், ஆக மொத்தம் ரூ.442.50 என்றும் அந்த பில்லில் அச்சிடப்பட்டிருந்த்து.
இந்த பில்லை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் போஸ், ”நீங்கள் இதை பார்த்தால் தான் நம்ப முடியும். பழங்களால் நமது உயிருக்கு ஆபத்து கிடையாது என்று யார் சொன்னது? ஓட்டலில் இருப்பவர்களிடம் கேளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் இதுவரை. அந்த நட்சத்திர ஓட்டல் தரப்பிலிருந்து இது குறித்து பதில் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஓட்டல் பில் இது தான்:-