கலாபவன் மணி உடலில் பூச்சிக்கொல்லி மருந்து: கொலையாளி யார்?

பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் கேரளாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் அவரது உடலில் ‘மெத்தனால்’ என்ற போதை அளிக்கும் ரசாயனம் அதிகளவில் இருந்தது மருத்துவர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் இதுபற்றி போலீசுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் கொடுத்தது.

கலாபவன் மணியின் மரணத்திற்கு அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதுதான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், கலாபவன் மணியின் உடல் உள்ளுறுப்புகளின் மாதிரிகள் ரசாயன பரிசோதனைக்காக காக்கநாட்டில் உள்ள பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், அவரது உடல் உள்ளுறுப்புகளில் சைக்ளோபைரிபோஸ் என்ற பூச்சிக்கொல்லி தடயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இத்தகவல், வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது பண்ணை வீட்டில் மது விருந்து நடந்தபோது அவர் குடித்த மதுவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மதுவில் விஷம் கலந்த கொலையாளி யார் என கண்டுபிடிப்பதற்காக கலாபவன் மணியின் உதவியாளர்கள் அருண், பிஜின், முருகன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

                                                                                    # # #

Insecticide traces in Kalabhavan Mani’s body, doubts over actor’s death

A highly “dangerous” insecticide has been found in the viscera samples of noted Malayalam actor Kalabhavan Mani, adding to doubts that his death was not natural.

Traces of the insecticide ‘Chlorpyrifos’ were found in the samples, agencies reported, after they were sent to the Regional Chemical Examiner’s Laboratory in Kochi for testing. Methyl and ethyl alcohol contents were also found.

45-year-old Kalabhavan Mani, known for his award-winning performance in ‘Vasantiyum Lakshmiyum Pinne Njanum’, was undergoing treatment for liver and kidney diseases at Amrita Institute of Medical Sciences (AIMS) for some time before his death on March 6.

Police had earlier registered a case of unnatural death after AIMS doctors told police that traces of methyl alcohol was found in his blood.

After doubts over the cause of death were raised by Mani’s family, police questioned a few of Mani’s aides. His wife Nimme rubbished reports that there were problems in the family.

“There were no family problems. You can ask anyone. There were no issues between us”, she told reporters.

Asked if the actor had any enemies, she replied in the negative. Since some of his friends had gathered at the outhouse ‘Padi’, they would have encouraged him to have liquor, she said.

Mani –who played important roles in over 200 Malayalam films , besides many Tamil, Telugu and kannada films — had risen from humble beginnings.

Courtesy: ibnlive.com