அதிகாரத்தின் லட்சணம்!

‘பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள்’ பற்றிய கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின்  பிரஸ் மீட் பார்த்தேன். ஒரு போலீஸ் அதிகாரிக்கே உரிய கம்பீரமோ ஒரு பிரஸ்ஸை எதிர்கொள்ளும் தைரியமோ இல்லாத உடல்மொழியைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் என் இளம்பிராயத்து கனவு ‘எஸ்.பி ஜாப்’!
பிரஸ்மீட்டில் நடுநடுவே உளறிவேறுக் கொட்டினார்.

“எவ்வளவு பணம் சார் அந்தப்பொண்ணுகள்ட்ட அவனுக பறிச்சாங்க?”
“அது இருக்கும் ஆயிரக்கணக்குல!”

“ஏன் புகார் தந்த பொண்ணோட பேரையும் அட்ரஸையும் வெளியிட்டீங்க?”
“இனி அப்படி நடக்காது!”

இதாவது பரவாயில்லை. `சமூக ஆர்வலர்’ என்ற வார்த்தைக்குக்கூட அர்த்தம் தெரியாமல் திறுதிறுவென விழித்த கொடுமையெல்லாம் உச்சம்.

பதட்டமான அதே சமயத்தில் டீட்டெய்லிங் ஏதுமற்ற வெற்று பிரஸ்மீட் இது. ஆளுங்கட்சி சொன்னதை சிரமேற்கொண்டு செய்ததை உணர முடிந்தது. இவர்தான் விசாரணை அதிகாரியாம். சூப்பரு!
ஆனால், இந்த ஸ்டேட்டஸுக்கான விஷயம் அது அல்ல. இந்த எஸ்.பியின் முகத்தை எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருக்கிறதே என மூளையைக்கசக்கி யோசித்து யோசித்து கண்டுபிடித்து விட்டேன்.

2017-ல் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி போராட்டம் செய்த ஒரு பெண்ணை பளார் என பப்ளிக்காக அறைந்தாரே ஒரு புண்ணியாத்மா அவர்தான் இந்த பாண்டியராஜன் ஐ.பி.எஸ். அன்று திருப்பூர் ஏடிஎஸ்பியாக இருந்தபோது ஒரு பெண்ணை அறைந்தவருக்கு புரொமோஷனில் எஸ்.பி பதவியும் கிடைத்து ‘பொள்ளாச்சியின் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை விசாரிக்கும் வழக்கு’ம் (!) வந்திருக்கிறது.

இன்னும் என் வாழ்நாளில் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்கணுமோ?

SARAN RAM