எம்.ஜி.ஆர். 102-வது பிறந்த நாள்: நடிகர் சங்கம் மரியாதை
நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சங்கம் சார்பில் அவரது புகைப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர்கள் நந்தா, மனோபாலா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.