“மீ டூ” போல “வீ டூ” ஹேஷ்டாக்: தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்பை பகிர்ந்து கொள்ளலாம்!

பெண்கள் இப்போதோ, எப்போதோ தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை, பாலியல் துன்புறுத்தல்களை சமூக ஊடகங்களில் பகிரங்கமாக பகிர்ந்துகொள்வதற்காகவும், குற்றவாளிகளை அம்பலப்படுத்துவதற்காகவும் #Metoo என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்தி திரையுலகம், ஊடக உலகம், தன்னார்வத் தொண்டு உலகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், செல்வாக்கு மிக்க ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

உலகெங்கும் #Metoo ஏற்படுத்திவரும் விழிப்புணர்வால் ஊக்கம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிகுமார், இதே பாணியில் தலித்துகள் தங்களுக்கு நேர்ந்த அவமதிப்புகளை பகிரங்கமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வதற்காக #WeToo என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கியுள்ளார்.

“நண்பர்களே! சாதிய பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட தலித்துகள் தமக்கு நேர்ந்த அவமதிப்புகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளும்பொருட்டு #WeToo என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கியுள்ளேன். நண்பர்கள் அதை பயன்படுத்தி தமது பதிவுகளை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்துள்ளார் ரவிகுமார்.

0a1b