அயனாவரம் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த “மனுஷ ப்ராணிகளை காயடிக்க வேண்டும்!” – பார்த்திபன்

“அறுத்தெறியுங்கள்!!!” என்ற தலைப்பில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

இந்த நிமிடம்

இதே மணிக்கு

இங்கோ அங்கோ எங்கோ

ஒரு பாலியல் வன் கொடுமை

நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது …

அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய

நிகழ்வை பார்த்தபடி!!!

அதை தடுப்பது எப்படி?

ஏனெனில்,

போன வாரம்

போன மாதம்

போன வருடம்

வேறு ஒரு சிறுமியின் உறைந்த ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர், ஈக்களாய் மொய்த்துக் கொண்டிருக்கையில்

இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்

செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை

பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.

எனவே

நம் கண்களையும் காதுகளையும்

கூர்மையாக்கி, ___- க்கு அலையும்

மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து

காயடிக்க வேண்டும்!

இவ்வாறு அறிக்கையில் பார்த்திபன் கூறியுள்ளார்.