அழிவின் விளிம்பில் இருக்கும் மனித உயிரினத்துக்கு… ஆழ்ந்த அனுதாபங்கள்; சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்!
“மார்க்ஸ் காலத்தில் இயற்கைவள ஆதாரங்கள் எல்லையற்றவையாகத் தோன்றின. அக்காலத்தில் எண்ணெய், எரிவாயு போன்றவை கண்டறியப்படவில்லை. நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவே, மார்க்ஸை பொறுத்தவரை, இப்புவிக்கோளின் ஆதார வளங்கள் எல்லையற்றவை.
இயற்கை வள ஆதாரங்கள் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும்போது, மக்கள் தொகை பெருகிக்கொண்டே போனால் ஏற்படும் நெருக்கடிக்கு எதிராக மால்தூஸ் என்ற புகழ் பெற்ற மனிதர் குரல் கொடுத்தார். மார்க்ஸ் காலத்தில் இத்தகைய போக்கு குறித்து அறியப்படவில்லை.”
– பிடல் காஸ்ட்ரோ (‘கெடுபிடிப்போர்’ என்ற நூலில்).
முதலாளிகளின் லாபவெறி, அவர்கள் மக்கள் மீது திணித்த நுகர்வுவெறி, இவற்றை அறியாத அறிவியல் பூசாரிகளின் தொழில்நுணுக்கவெறி ஆகியவை காரணமாக இன்னும் 100 ஆண்டுகளில் முற்றாய் அழிந்தொழியப் போகும் மனித உயிரினத்துக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களும், உலக சுற்றுச்சூழல் தின நல்வாழ்த்துக்களும்!
(உலக சுற்றுச்சூழல் தினம் இன்று – 05.06.2018)
ராஜய்யா
ஆசிரியர், ஹீரோ நியூஸ் ஆன்லைன்