“யேய்…” – ரஜினியின் ஆன்மிக வேடம் கலைந்து பாசிச பொறுக்கி வெளிப்பட்ட தருணம்!
தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம், “தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை நீங்கள் கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறார்களே?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். “யார் குற்றம் சாட்டுவது?” என்று ரஜினி கேட்க, “கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள்…” என்று செய்தியாளர்கள் சொல்ல, ரஜினிக்கு கோபம் சுர்ரென்று உச்சி மண்டைக்கு ஏறியது.
“தூத்துக்குடி போராட்டத்தை நான் கொச்சைப்படுத்தவில்லை. பொதுமக்களின் போராட்டத்தில் கடைசி நேரத்தில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து கெடுத்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளில் எப்படி கெடுத்தார்களோ, அதுபோல்தான் இதிலும் செய்து உள்ளனர். போராட்டம் நடத்தியது சாதாரண அப்பாவி மக்கள்தான். ஆனால் சமூக விரோதிகள் தான் உள்ளே புகுந்து போலீசை தாக்கினார்கள். கலெக்டர் அலுவலகத்தை நொறுக்கியதும், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு பகுதியை எரித்ததும் அவர்கள்தான்” என்றார் ரஜினி.
“சமூக விரோதிகள் தான் இதை செய்தார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, ஆத்திரம் அடைந்த ரஜினி, “இது எப்படி தெரியும் என்று கேட்க வேண்டாம். எல்லாம் எனக்கு தெரியும்” என்று சீறினார்.
“போலீசுக்கும், அரசுக்கும் ஆதரவாக பேசுகிறீர்களே?” என்று ஒரு செய்தியாளர் கேட்டது தான் தாமதம், ரஜினி ஒரு பாசிச பொறுக்கியாக மாறி, “யேய்…” என்று ஆவேசமாக செய்தியாளர்களைப் பார்த்து காட்டுத்தனமாக கத்தினார்.
“வேற ஏதாவது கேள்வி இருக்கா?” என்று கத்திய ரஜினி, “எதுக்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம்னு போனா, தமிழ்நாடு சுடுகாடாக ஆகிவிடும்” என்று ஆவேசமாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
ரஜினியின் ஆன்மிக வேடம் கலைந்து, அவருக்குள் இருக்கும் பாசிசப் பொறுக்கி வெளிப்பட்ட இந்த தருணத்தைப் பார்த்த செய்தியாளர்கள், ரஜினி மீதான அதிருப்தியை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.