“காலா’ ரிலீசாகும் நாளிலேயே இணையதளத்தில் வெளியிடுவோம்”: ‘தமிழ் ராக்கர்ஸ்’ அறிவிப்பு!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2018/05/0a1b-15.jpg)
ரஜினிகாந்த் நடிப்பில், தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படம் வருகிற (ஜூன்) 7ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது. லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
இந்நிலையில், புதிய தமிழ்ப்படங்களை சட்டப்பூர்வ அனுமதியின்றி இணையதளத்தில் வெளியிடும் ‘தமிழ் ராக்கர்ஸ்’, “காலா’ திரைக்கு வரும் அதே நாளிலேயே இணையதளத்தில் அப்படம் வெளியிடப்படும்” என்று அறிவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், தமிழக அரசியலில் ரஜினி ஈடுபடுவதை விரும்பாத ரசிகர்கள், ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.