சாந்தினி நடிக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல என்கிற ஐஸ்வர்ய லட்சுமி’!
அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல என்கிற ஐஸ்வர்ய லட்சுமி’. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர். ஏற்கனவே மம்மூட்டி, ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ், மலையாள படங்களை தயாரித்தவர். தயாரிப்பாளர்களில் இன்னொருவரான ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர். தற்சமயம் இருவரும் பிரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில நடத்தி வருகிறார்கள்.
நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். ‘எமன்’ படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன்.
டி..ஆர்.கிருஷ்ணசேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீண் எடிட்டராகவும் இதில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘பிச்சைக்காரன்’, ‘சலீம்’ படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப்படத்தின் கலை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இப்படத்தின் பூஜை மாமல்லபுரத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் சொந்த Resort-ல் நடைபெற்றது.ராஜேஷ் தாஸ் I.P.S குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.