நாமும் படம் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம் சிறிதும் வெட்கமில்லாமல்!
இந்த ஆண்டின் சிறந்த குறு ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘A Girl in the River:The prize of Forgiveness’ பெற்றுள்ளது.
ஷர்மீன் அபைட் எனும் பெண் இயக்குனரின் இந்தப் படம் பாகிஸ்தானில் நிகழும் கௌரவக் கொலைகள் குறித்து, அத்தகைய கொலை முயற்சியிலிருந்து தப்பிய ஒரு இளம்பெண்ணின் அனுபவத்தின் வழி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் விளைவால் பாகிஸ்தானில் கௌரவக் கொலைகள் தடுப்பதற்கான புதிய சட்டம் கொண்டுவர அறிவிக்கப்படுள்ளதாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2012ஆம் ஆண்டில் பெண்கள் மீதான அமில வீச்சு குறித்த ‘Saving face’ என்ற ஆவணப்படத்திற்கு இதே பிரிவில் இதே இயக்குனர் விருதுபெற்றுள்ளார் என்பது நம்பிக்கையளிக்கும் சாதனை.
எனக்கு இப்போது தோன்றுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இங்கேயும் சாதி ஆணவக் கொலைகளும், அமிலத் தாக்குதல்களும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இங்கும் படம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் சிறிதும் வெட்கமில்லாமல்!
– பாரதி சண்முகம்