‘மெர்சல்’ சர்ச்சை: மக்கள் வேறுபாடுகள் களைந்து ஒன்றிணையும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி தருகிறது!
சீமான் மீது கருத்து வேறுபாடு உண்டு. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கே.டி.ராகவன் ஓவராக சீமானை பேசினார். வேறுபாடுகளை மறந்து எல்லாரும் ஒன்றிணைந்து பாஜகவை துவட்டினோம்.
கமலை பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர் ரசிகர்களுக்கே அவருடன் கருத்து வேறுபாடு உண்டு. அவரை எலும்பு நிபுணர் விமர்சித்தபோது மொத்த பேரும் இணைந்து துவைத்து காயப்போட்டோம்.
இதுபோல் இன்னும் பல இயக்கத்தவர், தனி நபர்கள், ஊடகத்தவர் என பலர் பாஜகவால் ஒடுக்கப்பட்டபோது ஒன்றிணைந்தோம்.
இப்போது மெர்சல் படத்துக்காக விஜய்க்கு. இதில் நகைச்சுவை என்னவென்றால் மொத்த தமிழ்நாட்டாலும் அதிகமாக செய்யப்பட்டவர் விஜய் என்பதே.
பாஜக என்றாலே தமிழகத்தின் கூட்டு மனநிலை இதுதான்.
தமிழக அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி விடலாம். மக்களை?
ஒவ்வொரு பிரச்சினையின் போதும் பாஜகவினர் நடந்துகொள்ளும் போக்கு, காட்டும் ஆணவம், வெளிப்படுத்தும் வெற்று அகங்காரம் என அனைத்தையும் மக்கள் பார்க்கிறோம். பொருளாதார ரீதியில் கடுமையான சீரழிவுக்கு உட்படுத்திவிட்டு, பாசாங்குக்காக கூட தவறை உணர்வதாக காட்டிக் கொள்ளாமல் நிர்மலா சீதாராமன்களும் ராஜாக்களும் ராகவன்களும் பொன்னார்களும் பேசித் திரிவது மக்களை கடும் சினத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
ஒவ்வொரு தொலைக்காட்சி ஊடகத்தையும் மிரட்டி எல்லா விவாதங்களிலும் அட்வான்ஸ் புக்கிங்கில் ஒரு சீட் ரிசர்வ் செய்து வைத்தால் மட்டும் என்ன ப்ரயோஜனம்? அங்கு வந்து நீங்கள் கத்தும் கத்தையும் அடுத்தவரை பேசவிடாமல் ஒடுக்கும் பேச்சையும் பார்க்கும் மக்களுக்கு உங்கள் மீது அன்பு பீறிட்டு வந்துவிடவா போகிறது?
மக்கள் அனைவரும் வேறுபாடுகள் களைந்து ஒன்றிணையும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி தருகிறது. And we are enjoying those moments. பாஜக எதேச்சதிகாரத்துக்கு மட்டுமே பயிற்சி பெற்றுள்ளது. அரசியலில் பூஜ்யம்தான். வாயை பல நேரங்களில் எப்படி பயன்படுத்துவது என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ளவே இல்லை. எல்லா பிரச்சினைகளிலும் கருத்து தெரிவித்து திரிவது தங்களை மீடியாவில் எப்போது வைத்திருக்கும் என்ற பாஜகவின் உத்தி, நடுரோட்டில் உடையை களைந்து நிற்கும் பைத்தியக்காரனின் உத்தி. மூடிக் கொண்டிருப்பது நம் முட்டாள்தனத்தை மறைக்க பல நேரங்களில் உதவும். ஆனாலும் இது எதுவும் பாஜகவுக்கு எள்ளளவும் புரியப் போவதில்லை என்பதுதான் the reason why I’m loving them to the core. ஏனெனில் எங்களின் வேலையை எளிமை ஆக்கிவிடுகிறார்களே!
பாஜகவினர் ரொட்டில் போகும் நாயை நாய் என்றாலும் மொத்த தமிழ்நாடும் இனி எழுந்து பாஜகவை திட்டி ISupportNaai என ஹேஷ்டேக் போடும். கவுண்டமணி, செந்தில் காமெடி பாணியில் சொல்வதானால், வந்தாரை வாழ வைக்கும் நாடுன்னு சொல்ற எங்களுக்கே உங்கள பிடிக்கலையே, இன்னும் எங்க சேட்டன்ஸ், பெங்காலிஸ் பக்கமெல்லாம் போனா என்னா ஆகும்?
RAJASANGEETHAN JOHN