மனைவியை விற்க சொல்லுகிறார் (அ)நீதிபதி! அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?
“உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை விற்று விடுங்கள்” என்று ஒரு மாவட்ட (அ)நீதிபதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பீகாரில் மாவட்ட நீதிபதியாக உள்ள கண்வால் தனுஜ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தின் வீடுகளில் கழிப்பிடம் கட்டுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு கிராமத்தினர் முன்னிலையில் பேசினார்.
அவர் பேசுகையில் :‛‛நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் உங்கள் மனைவியின் கவுரவத்திற்கு மரியாதை கொடுங்கள், ஒரு கழிப்பிடம் கட்ட அதிகபட்சம் 12,000 ரூபாய் செலவாகும், உங்கள் மனைவியின் கவுரவம் ரூ 12,000 க்கும் குறைவாகவா மதிப்பிடுகிறீர்கள். உங்களில் பலர் தேவையில்லாமல் நிறைய செலவு செய்வீர்கள். அத்தியாவசியமான செலவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை விற்று விடுங்கள்” என்று கூறினார்.
அவரது சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றன.
நமக்குத் தெரிய வேண்டியது இது தான். மனைவியை விற்க ஆலோசனை கூறியிருக்கிறாரே… மனைவியை விற்கும் வழக்கம் தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறதா? மனைவியை விற்க இந்திய சட்டத்தில் இடம் இருக்கிறதா?
சட்டத்தில் இடம் இல்லை என்றால், சட்டத்துக்கு புறம்பாக இப்படி சொன்னதற்காக இந்த (அ)நீதிபதிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?