ஒரு மாஸ் ஹீரோ போல,”எங்க, அடி பாக்கலாம்” என்று ஓவியா கெத்தாக வந்தது செம…!

பிக்பாஸ் – 21.07.2017

இன்றைய நிகழ்வின் இறுதிப்பகுதியை மட்டும் பார்க்க முடிந்தது. அதற்கே சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.

***

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்

மீண்டும் தர்மமே வெல்லும்.

தோழர் ஓவியாவுக்கு பொம்பளை ரவுடிகளான காயத்ரியும் நமீதாவும், அடிமை ஜூலியும், தலையாட்டி பொம்மை ரைசாவும் இணைந்து அதிக உளைச்சல் தருவது ஒருவகையில் நல்லதே.

இதன் மூலம் ஓவியாவின் புகழ் சர்வதேச எல்லையையும் தாண்டப் போகிறது என்பது தலையில்லா அந்த ஜீவன்களுக்கு தெரியவில்லை. இந்த முறை வருகிற வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்து விஜய் டிவியே ஆடிப் போகப் போகிறது.

தலைவனாக அல்ல, ஆணாக இருக்கக் கூடாத தகுதியில்லாத சக்தி என்கிற ஜென்மம், தன் வெற்று வீரத்தைக் காட்ட ‘பளார்’னு அறையணும் போலிருக்கு என்று துள்ளும்போது, ஒரு மாஸ் ஹீரோக்கு எவ்வித குறைச்சலும் இல்லாமல் “எங்க அடி பார்க்கலாம்” என்று தோழர் ஓவியா கெத்தாக வந்தது செமயான சீன்.

ஆணின் வெற்று வீராப்புகளை எதிர்கொள்வதில் இதில் பெண்களுக்கு பாடம் உள்ளது.

நமீதா என்கிற மாமிச மலை அழுதுகொண்டே வெளியேறப் போகிற காட்சிகளை நினைத்தால் இப்போதே மனம் குதூகலிக்கிறது.

ஆனால், இந்த அநீதிகளையெல்லாம் ‘வெச்சு செய்கிற கேள்விகளாக’ அல்லாமல், வாழைப்பழத்தை விழுங்கியது போல வழவழவென்று சனியன்று அணுகப் போகும் ‘மொக்கை நாட்டாமை’யை நினைத்தால்தான் எரிச்சல் வருகிறது.

இதை எந்த தளத்தில் போய் புகார் செய்வது?

SURESH KANNAN