எல்லாரும் டபுள் கேம் ஆடுதுங்கன்னா, ஜூலி ட்ரிபிள் கேம் ஆடுது!

ஜூலி வயித்து வலி வந்து பெட்டுல படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கு. பக்கத்துல ஓவியா வந்து ஆறுதல் சொல்லுது… அப்போ ஜூலி, “இந்த நிலமைலயும் நான் நடிக்கிறேன்னு எல்லாரும் சொல்றாங்களே”ன்னு ஒப்பாரி… அதுக்கும் ஓவியா பொறுமையா ஆறுதல் சொல்லுது…

காயத்ரி உள்ள வந்த உடனே சீனே மாறிடுது…. ஜுலி சந்தேகப்பட்டு கேட்டதுக்கு காயத்ரிக்கு அப்படி கோவம் வருது.. நமீதாவுக்கு அதவிட கோவம் வருது… ரெண்டு பேரும் “கடவுள் இருக்கார் பாத்துக்குவார்”னு வேற சொல்றாங்க… கடவுள்லாம் எதுக்கு, பிக்பாஸ் இருக்காரு, அவர் கேமரா இருக்குன்றத ரெண்டு பேரும் மறந்துட்டாங்க….

அதவிட பெரிய கேவலம், ஓவியா ஆறுதல் சொல்ற வரை கேட்டுட்டு இருந்த ஜுலி, ஓவியா போனதும் காயத்ரிகிட்ட “ஓவியா உங்கள பத்தி தப்பா சொன்னத எல்லாரும் தெரிஞ்சிக்கணும்; அதான் உங்ககிட்ட கேட்டேன்”னு ப்ளேட்ட திருப்பிப் போடுது… எல்லாரும் டபுள் கேம் ஆடுதுங்கன்னா, இது ட்ரிபிள் கேம் ஆடுது…. முடியலடா சாமி….. இந்த புள்ளைக்கு சினிமாவெல்லாம் வேணாம்.. ஸ்ட்ரெயிட்டா அரசியல்லயே சேத்து விடுங்கய்யா… எங்கேயோ போய்டும்…

ஓவியா…. தலைவி அகைன் க்ரேட்…. எவ்ளோ சென்சிட்டிவான பிரச்சனைய எவ்வளவு அருமையா ஹேண்டில் பண்ணுச்சு…. எல்லாரும் தங்கள் மனசுல இருக்கிற வக்கிரத்தையும் வன்மத்தையும் குரூரமா கொட்டுறாங்க… ஓவியா மட்டும் இவ்ளோ நடந்தும் மத்தவங்களை பத்தி புறம் பேசாம க்ளீனா பிரச்சனைய மட்டும் ஹேண்டில் பண்ணுது…. தலைவி பேசுற டயலாக்ஸ் எல்லாம் நோட்ஸ் எடுக்கணும்… நாளைக்கு எம்பிஏ பாடத்துல வைக்க வேண்டி வரும்….

MARAM R

# # #

ஜூலிக்கு வயிறு வலிச்சத விட மனசு தான் அதிகமா வலிச்சுருக்கும் என்று சொல்லும்போது ஓவியாவிடம் தன்னியல்பாக வெளிப்பட்ட தாயன்பை யாரெல்லாம் கவனித்தீர்கள்? இதுவெல்லாம் கடவுள் மனம்.. ஆனால் காயத்ரியும் நமீதாவும் “கிருஷ்ணன் பார்த்துக்கொண்டிருக்கிறான்; அவன் ஓவியாவுக்கு தண்டனை கொடுப்பான்” என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. அடப்பீத்த சிறுக்கிகளா… ஆஃபாயில்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்கள்..

உதாரணம் 1 : ஜூலி அதிகமாக வயிறுவலியில் துடிக்கும்போது.. “இப்படிலாம் ஓவரா ரியாக்ட் செஞ்சின்னா உன்னைய உடல்நலம் கருதி எவிக்ட் செஞ்சிருவங்க”ன்னு காயத்ரி சொல்லுது.. இது ஒரு வன்மம் மிக்க வார்த்தைகள்.. ‘ரொம்ப நடிக்காதடி’ன்ற மாதிரி.. ஆனா இதையே அவள்பால் கொண்ட அக்கறையில் சொன்னதாகத் திரித்து மாற்றினாள்.. ”நடித்துக்கொண்டிருக்கிறாள்; ச்சே… என்ன ஜென்மமோ” என்று திட்டியதும் இவளே. கூடவே நமீதாவும்..

அப்பறம் யாரு… ரைசாவா? அவளை நீ ஒரு ”லூசுமுண்ட”ன்னு சொன்னாலும் “true true எக்ஸாட்லி வாட் அயம் திங்கிங்” என்பாள் லூசு முண்ட..

ஜூலி வயிற்றுவலியில் இருக்கும்போது பக்கத்துல கூட போகாத இவளுக தான் அவ மேல அக்கறையா இருந்தாளுகளாம்…

ஜூலி தன்னைப்பற்றி அவதூறுதான் சொல்வாள் என்று தெரிந்து அந்த நேரத்திற்கு அவள் உடனிருந்து ஆறுதல் சொல்லும்போது ஓவியா மேல் பேரன்பும் பரிதாபமும் ஒருசேர எழுந்தது.. இந்த நாய் எப்படியும் உன்னைய கொஞ்ச நேரத்துல திட்டத்தான் போகுது எதுக்கு இதெல்லாம்?

உதாரணம் 2: “எங்க காயத்ரி அக்கா முன்னாடி ஓவியா முகத்திரைய கிழிக்கணும்னு நினைச்சேன் அவ எந்திச்சு போயிட்டாக்கா” என்று வேறு ஒரு நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறாள் ஜூலி.. அடி எழவு மகளே…

இவளுக அனத்திட்டு கிடப்பதைப் பார்த்து, எல்லாவற்றையும் இதழோரப் புன்னகையில் அலட்சியமாகக் கடந்து போகிறது பரிசுத்த ஓவியம்!

MEENAMMA KAYAL