“காடு காடு சவரிக்காடு! நெஞ்சில் துணிவிருந்தால் நெருங்கிப் பாரு”!!
அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படம் ‘சவரிக்காடு’. இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவர் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு ஆகிய இருவர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ரோபோ சங்கர், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.என்.கிருஷ்ணகுமார். இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “இது புது மாதிரியான திரைக்கதையம்சம் கொண்ட படம். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம் இது.
“காடு காடு சவரிக்காடு
நெஞ்சில் துணிவிருந்தால்
நெருங்கிப் பாரு’ என்ற பாடல் காட்சிக்காக, சவரிக்காடு என்ற பெயர் பொறித்த சட்டைகள் உருவாக்கப்பட்டு , சென்னை மற்றும் மலேசியாவில் பொதுமக்கள் பங்கேற்க பாடலை படமாக்கினோம். இந்த பாடல் காட்சியில் திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றனர்.
“நண்பர்களைப் பற்றியும், நட்பைப் பற்றியும் உயர்வான மதிப்பை ஏற்படுத்தும் படமாக ‘சவரிக்காடு’ உருவாகி உள்ளது. படம் விரைவில் வெளிவர உள்ளது” என்றார்.
ஒளிப்பதிவு – கே.கோகுல்
இசை – ஏ.டி.இந்திரவர்மன்
பாடல்கள் – தேவதேவா, திருக்குமரன்
படத்தொகுப்பு – மாரீஸ்
கலை – எம்.ராஜாகண்ணதாசன்
நடனம் – விஜயபாண்டி
ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா
தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.நாகராஜன்
ஊடகத் தொடர்பு – மௌனம்ரவி