தமிழின படுகொலை நாள்: ராமேஸ்வரம் கடலில் மலர் தூவி அஞ்சலி!
தமிழீழ விடுதலைக்கான இறுதிப்போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவித்தது சிங்கள ராணுவம்.
இந்த தமிழின படுகொலையை நினைவு கூரும் வகையில், நினைவேந்தல் கூட்டம் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் திரளான பொதுமக்களும், மீனவர்களும் கலந்து கொண்டு, ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.