பிரபுதேவா முதன்முதலாக எழுதிய பாடல்: கும்பகோணத்தில் படப்பிடிப்பு!
வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தை தயாரித்து வருகிறார்கள். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது தவிர, பிரபுதேவா நாயகனாக நடிக்கும் ‘எங் மங் சங்’ படத்தையும் தயாரிக்கிறார்கள். ‘தேவி’ வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்ஜே பாலாஜி, பாகுபலி பிரபாகர் (கலக்கேயா), கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.எஸ்.அர்ஜுன். இவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
‘எங் மங் சங்’ படம் பற்றி இயக்குனர் அர்ஜுன் கூறுகையில், “இந்த படத்திற்காக பிரபுதேவா முதன்முறையாக எழுதிய பாடலான “அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு” என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவானது. சங்கர் மகாதேவன் குரலில் பதிவான இந்தப் பாடல் தற்போது கும்பகோணத்தில் 150 நடன கலைஞர்களுடன் பிரபுதேவா பங்கேற்க மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பிரபுதேவா நடனம் என்றாலே பரபரப்பாக இருக்கும். அதிலும் 150 நடன கலைஞர்களுடன் அவர் ஆடும்போது ஊர் மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இந்த பிரமாண்டமான பாடல் காட்சி ஸ்ரீதர் நடன அமைப்பில் உருவாகி இருக்கிறது. ஏராளமான துணை நடிகர் – நடிகைகளும் பங்கேற்ற இந்தப் பாடல் காட்சி படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்றார் இயக்குனர் அர்ஜுன்.
ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ்
இசை – அம்ரீஷ்
கலை – ராஜன்.டி
தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.பி.பாலகோபி
ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி